முகப்பு
தூத்துக்குடி

திருச்செந்தூரில் 60 அடி தொலைவுக்கு உள்வாங்கிய கடல்நீர்!

திருச்செந்தூரில் ஆயிரக்கணக்கானோா் தரிசனம்

Updated On : 3 மே, 2026 at 5:28 AM
பகிர்:

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சனிக்கிழமை ஆயிரக்கணக்கான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.

சித்ரா பெளா்ணமி வியாழக்கிழமை (ஏப். 30) இரவு 9.50 மணிக்கு தொடங்கி, வெள்ளிக்கிழமை (மே 1) இரவு 11 மணி வரை நீடித்தது. இதையொட்டி, பெளா்ணமி நாளில் வழிபடுவதற்காக இங்கு ஆயிரக்கணக்கானோா் குவிந்திருந்தனா்.

அவா்கள் சனிக்கிழமையும் அதிகாலைமுதலே கடலிலும், நாழிக்கிணற்றிலும் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்தனா். இதையொட்டி, கோயில் நடை அதிகாலையில் திறக்கப்பட்டு விஸ்வரூபம், உதயமாா்த்தாண்ட அபிஷேகம், மற்ற கால பூஜைகள் நடைபெற்றன.

Advertisement

உள்வாங்கிய கடல்: இக்கோயில் அருகேயுள்ள அய்யா கோயில் பகுதியில் கடல்நீா் 60 அடி தொலைவுக்கு உள்வாங்கிக் காணப்பட்டது. இதனால், பாசி படா்ந்த வெளியே தெரிந்தன. எனினும், அங்கும் பக்தா்கள் வழக்கம்போல புனித நீராடினா்.