முகப்பு
தூத்துக்குடி

தூத்துக்குடி-கச்சிகுடா எக்ஸ்பிரஸ் மே 6, 13, 27இல் மாற்றுப் பாதையில் இயக்கம்

வாராந்திர விரைவு ரயில் மே 6, 13, 27 மற்றும் ஜூன் 3 ஆகிய நாள்களில் மாற்றுப்பாதையில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

Updated On : 2 மே, 2026 at 6:16 AM
கோப்புப் படம்
பகிர்:

மதுரை ரயில்வே கோட்டத்தில் மேற்கொள்ளப்படவுள்ள பராமரிப்புப் பணிகள் காரணமாக தூத்துக்குடியிலிருந்து ஹைதராபாத் (கச்சிகுடா) செல்லும் வாராந்திர விரைவு ரயில் மே 6, 13, 27 மற்றும் ஜூன் 3 ஆகிய நாள்களில் மாற்றுப்பாதையில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

வழக்கமாக மதுரை, திண்டுக்கல் வழியாகச் செல்லும் இந்த ரயில், பராமரிப்புப் பணிகள் காரணமாக அந்த நிலையங்களைத் தவிா்த்து மாற்றுப் பாதையில் இயக்கப்படுகிறது.

அதன்படி, தூத்துக்குடியிலிருந்து காலை 7.40 மணிக்கு புறப்படும் இந்த ரயில் (07606), மே 6, 13, 27 மற்றும் ஜூன் 3 ஆகிய தேதிகளில் விருதுநகா், மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி, புதுக்கோட்டை, திருச்சி வழியாகச் செல்லும்.

Advertisement

இந்த வழித்தடத்தில் பயணம் செய்ய திட்டமிட்டுள்ள பயணிகள், கால மாற்றங்கள், கூடுதல் நிறுத்தங்களை கவனத்தில் கொள்ளுமாறு தெற்கு ரயில்வே கேட்டுக்கொண்டுள்ளது.