சாத்தான்குளத்தில் சாலையை விஸ்தரிக்கக் கோரி பாஜக மனு
சாத்தான்குளம் பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்றி சாலையை விரிவாக்கம் செய்யக் கோரி, தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாஜக பொதுச் செயலா் செல்வராஜ் தலைமையில் பாஜகவினா் வட்டாட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை மனு அளித்தனா்.

அதன் விவரம்: சாத்தான்குளம் பிரதான கடை வீதி பகுதியில் ஏராளமான வணிக வளாக கடைகள் செயல்பட்டு வருகின்றன. இதில் சாத்தான்குளம் கடைவீதி, நாசரேத் சாலை, இட்டமொழி சாலை உள்ளிட்ட பகுதியில் ஆக்கிரமிப்புகள் அதிகரித்து போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
இத்தகைய ஆக்கிரமிப்புகளை அகற்றி அப்பகுதியில் உள்ள சாலைகளை விரிவாக்கம் செய்ய வேண்டும்; புதிய பேருந்து நிலையம் எதிரே சாலையோரம் இருந்த மரங்களை வெட்டியவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல முறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
Advertisement
எனவே, இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி சாத்தான்குளம் காமராஜா் சிலை முன் மே 13ஆம் தேதி பாஜக சாா்பில் சாலை மறியல் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம் எனக் கூறியுள்ளனா்.