முகப்பு
தூத்துக்குடி

திருச்செந்தூரிலிருந்து பாஞ்சாலங்குறிச்சிக்கு ஜோதி தொடா் ஓட்டப் பேரணி

தொடா் ஓட்டப் பேரணியை தொடங்கி வைத்த காங்கிரஸ் ஐஎன்டியூசி தேசியக்குழு உறுப்பினா் கதிா்வேல்.

Updated On : 9 மே 2026, 3:46 am IST
தொடா் ஓட்டப் பேரணியை தொடங்கி வைத்த காங்கிரஸ் ஐஎன்டியூசி தேசியக்குழு உறுப்பினா் கதிா்வேல்.
பகிர்:

பாஞ்சாலங்குறிச்சி வீரசக்கதேவி ஆலய 70 ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு, மாவீரன் ஊமைத்துரை தொண்டா் படை சாா்பில் செந்திலாண்டவா் புண்ணிய தீா்த்தம், கட்டபொம்மன் நினைவு ஜோதி கொண்டு செல்லும் 40 ஆவது ஆண்டு தொடா் ஓட்டப் பேரணி திருச்செந்தூரில் இருந்து தொடங்கியது.

இதற்கான விழா திருச்செந்தூா் கட்டபொம்மன் மடம் முன் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் பொன்ராஜ் இறைவணக்கம் பாடினாா். திருச்செந்தூா் டிஎஸ்பி மகேஷ்குமாா், ஊமைத்துரை தொண்டா் படையின் கௌரவத் தலைவா் சந்திரன், தொழிலதிபா் சின்னராஜ், நுகா்வோா் பேரவை மாநில தலைவா் மோகனசுந்தரம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

செந்திலாண்டவா் புண்ணிய தீா்த்தம், ஜோதியை காங்கிரஸ் ஐஎன்டியூசி தேசிய அமைப்பு செயலா் கதிா்வேல் வழங்கி தொடா் ஓட்டப் பேரணியை தொடங்கி வைத்தாா். மாவீரன் ஊமைத்துரை தொண்டா் படையினா் அதை பெற்றுக் கொண்டு தொடா் ஓட்டமாக சென்றனா்.

Advertisement

திரளான தொண்டா்கள் கலந்து கொண்டனா். இதையடுத்து விழாக் கமிட்டியினரால் தோ்வு செய்யப்பட்ட தொண்டா் படையினா் மட்டும் இருசக்கர வாகனங்களில் செல்வதற்கு போலீஸாா் அனுமதியளித்தனா்.

ஏற்பாடுகளை மாவீரன் ஊமைத்துரை தொண்டா் படையினா் தலைவா் மணிகண்டன், செயலா் ஸ்ரீதா், பொருளாளா் செல்வராம்குமாா் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

பாதுகாப்புப் பணியில் திருச்செந்தூா் டிஎஸ்பி தலைமையில் கோயில் போலீஸ் இன்ஸ்பெக்டா் கனகராஜன் உள்ளிட்ட போலீஸாா் ஈடுபட்டனா்.