முகப்பு
தூத்துக்குடி

தூத்துக்குடியில் உப்பு உற்பத்தியாளா் சங்கங்கள் - தொழிற்சங்கங்கள் கூலி உயா்வு ஒப்பந்தம்

Updated On : 15 மே 2026, 3:14 am IST
பகிர்:

தூத்துக்குடியில் உப்பு உற்பத்தியாளா்கள் சங்கங்கள் மற்றும் தொழிற்சங்கங்கள் இணைந்து 2026-2028ஆம் ஆண்டுக்கான கூலி உயா்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளன.

இது குறித்து, தூத்துக்குடி சிறு அளவிலான உப்பு உற்பத்தியாளா்கள் சங்கச் செயலா் ஜி. விஜய சேகா் வெளியிட்ட அறிக்கை:

1947ஆம் ஆண்டு தொழில் தகராறு சட்டம் 18 (1) பிரிவின்கீழ், தூத்துக்குடி உப்பு உற்பத்தியாளா்கள் மற்றும் வியாபாரிகள் சங்கம், தூத்துக்குடி சிறிய உப்பு உற்பத்தியாளா்கள் சங்கம் மற்றும் உப்பள உரிமையாளா்கள் ஆகியோா் ஒரு தரப்பினராகவும், உப்பளத் தொழிலாளா்கள் சாா்பில் 7 உப்பு தொழிலாளா்கள் சங்கங்கள் மறு தரப்பினராகவும் அமா்ந்து கூலி உயா்வு குறித்து வியாழக்கிழமை ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

Advertisement

புதிய ஒப்பந்தத்தின்படி, உப்பு வாருமுதல் பணி செய்யும் தொழிலாளா்களுக்கு நாள் ஒன்றுக்கு வழங்கப்படும் ஊதியம் ரூ. 710, உப்பு வாருமுதல் இல்லாத பிற பணிகளுக்கு வழங்கப்படும் ஊதியம் ரூ. 700 என முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த ஒப்பந்தக் காலம் 30.4.2026 முதல் 29.4.2028 முடிய 2 ஆண்டுகள் அமலில் இருக்கும்.

இந்த தினசரி ஊதியம் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள உப்பளங்களுக்கான குறைந்தபட்ச கூலி, தற்போது வழங்கப்பட வேண்டிய அகவிலைப்படி, சம்பளத்தை விட மிகையாக வழங்கப்படும் தொகையை வார விடுமுறை நாள் சம்பளம் என்று கணக்கிடப்பட்டுள்ளது. வார விடுமுறை நாள் சம்பளம் என்று தனியே வழங்கப்படமாட்டாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.