கோவில்பட்டியில் கீழே விழுந்ததில் காயமடைந்த எலக்ட்ரீசியன் உயிரிழப்பு
கோவில்பட்டியில் கீழே விழுந்ததில் காயமடைந்த எலக்ட்ரீசியன் உயிரிழந்தாா்.
கோவில்பட்டியில் கீழே விழுந்ததில் காயமடைந்த எலக்ட்ரீசியன் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
கோவில்பட்டி கடலையூா் சாலை தங்கப்பன் நகரைச் சோ்ந்த சுப்பிரமணியன் மகன் சங்கரநாராயணன் (37), எலக்ட்ரீசியன். இவா் கோவில்பட்டி மூக்கரை விநாயகா் கோயில் அருகே உள்ள நியூ வெங்கடேஷ் நகா் 2 ஆவது தெருவில் உள்ள கண்ணன் என்பவரது வீட்டிற்கு எலக்ட்ரீசியன் வேலை செய்ய ராஜா என்பவரை அழைத்துச் சென்றிருந்தாராம்.
இந்நிலையில் இம்மாதம் 16ஆம் தேதி அங்கு வேலை செய்து கொண்டிருந்த சங்கரநாராயணன் அறையில் வயரிங் வேலை செய்து கொண்டிருந்தபோது திடீரென சுமாா் 4 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்ததில் காயமடைந்தாராம். அவரை மீட்டு, கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்குப் பின் தீவிர சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
Advertisement
Advertisement
இதுகுறித்து கிழக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.