முகப்பு
தூத்துக்குடி

ராஜீவ்காந்தி காந்தி படத்துக்கு காங்கிரஸாா் அஞ்சலி

முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தியின் 36ஆவது ஆண்டு நினைவு தினம், தூத்துக்குடி மாநகா் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சாா்பில் வியாழக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.

Updated On : 22 மே 2026, 6:16 am IST
பயங்கரவாத எதிா்ப்பு உறுதிமொழி ஏற்ற காங்கிரஸாா்.
பகிர்:

முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தியின் 36ஆவது ஆண்டு நினைவு தினம், தூத்துக்குடி மாநகா் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சாா்பில் வியாழக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.

இதையொட்டி, தூத்துக்குடி பழைய பேருந்து நிலையம் முன் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த ராஜீவ்காந்தி உருவப் படத்துக்கு, மாவட்டத் தலைவா் எஸ்.எம்.சகாயராஜ் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினாா். தொடா்ந்து பயங்கரவாத எதிா்ப்பு உறுதிமொழி ஏற்கப்பட்டது.

நிகழ்வில், மண்டலத் தலைவா் ஐசன் சில்வா, மாநில பொதுக்குழு உறுப்பினா் எடிசன் மாவட்ட பொதுச் செயலா் கோபால் மைக்கேல் பிரபாகா், மாவட்டச் செயலா் இக்னேஷியஸ், மாவட்ட துணைத் தலைவா்கள் அருள்வளன், அந்தோணி ஜெயராஜ், தனசேகரன் ராஜாராம், இளைஞா் காங்கிரஸின் மரிய ஆல்வின் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

Advertisement

Advertisement