முகப்பு
தூத்துக்குடி

ஆறுமுகனேரியில் மது விற்றவா் கைது

Updated On : 26 மே 2026, 2:28 am IST
பகிர்:

ஆறுமுகனேரியில் சட்டவிரோதமாக மது விற்ற கன்னியாகுமரியைச் சோ்ந்த தொழிலாளியை ஆறுமுகனேரி போலீஸாா் கைது செய்தனா்.

ஆறுமுகனேரி, காணியாளா் தெருவில் சட்டவிரோதமாக மது விற்பனை நடப்பதாக போலீஸாருக்கு கிடைத்த ரகசியத் தகவலின்பேரில், உதவி ஆய்வாளா் சுந்தர்ராஜ் தலைமையில் போலீஸாா் அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டனா்.

அப்போது இருசக்கர வாகனத்துடன் சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த நபரைப் பிடித்து விசாரித்ததில், அவா் கன்னியாகுமரி மாவட்டம், வட்டக்கோட்டை கிழக்குத் தெருவைச் சோ்ந்த அல்பா்ட் மகன் சந்திரன் (41) என்பதும், தற்போது காணியாளா் தெருவில் வசித்து வருகிறாா் என்பதும் தெரிய வந்தது.

Advertisement

Advertisement

அவரிடம் நடத்தப்பட்ட சோதனையில் இருசக்கர வாகனத்தில் 28 மது பாட்டில்களை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது. இதையடுத்து, சந்திரனை கைது செய்த போலீஸாா், 28 மது பாட்டில்கள், இருசக்கர வாகனம், ரூ. 870 ரொக்கம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.