திருச்சி

மின்சார ரயில் என்ஜின் பராமரிப்பு நிலையம்

திருச்சி, ஆக. 19: திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையம் அருகில் | 90 லட்சத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மின்சார ரயில் என்ஜின் பராமரிப்பு நிலையம் ஓரிரு நாள்களில் செயல்பாட்டுக்கு வரும் என ரயில்வே வட்டாரங்கள் த

தி. இன்பராஜ்

திருச்சி, ஆக. 19: திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையம் அருகில் | 90 லட்சத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மின்சார ரயில் என்ஜின் பராமரிப்பு நிலையம் ஓரிரு நாள்களில் செயல்பாட்டுக்கு வரும் என ரயில்வே வட்டாரங்கள் தெரிவித்தன.

  விழுப்புரம் - திருச்சி இடையே அகல ரயில் பாதையில் கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வந்த மின்மயமாக்கல் பணி கடந்த ஆண்டு மார்ச் மாதம் நிறைவடைந்தது.

   மத்திய ரயில்வே இணை அமைச்சர் இ. அகமது மின்மயமாக்கல் பாதையை நாட்டுக்கு அர்ப்பணித்ததைத் தொடர்ந்து, கடந்த ஆண்டு, மே மாதம் முதல் இந்தப் பாதையில் மின்சார என்ஜின்கள் பொருத்தப்பட்ட ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

  மலைக்கோட்டை, நெல்லை, கன்னியாகுமரி, பொதிகை, பல்லவன், முத்துநகர் உள்ளிட்ட 26 விரைவு ரயில்கள் இந்தப் பாதையில் மின்சார என்ஜின் பொருத்தப்பட்டே இயக்கப்பட்டு வருகின்றன. மேலும், சில சரக்கு ரயில்களும் மின்சார என்ஜிகளுடன் இயக்கப்பட்டு வருகின்றன.

  இந்தப் பாதையில் இயக்கப்பட்டு வந்த டீசல் என்ஜின்கள் திருச்சி பொன்மலையில் உள்ள டீசல் பிரிவு நிலையத்தில் பராமரிக்கப்பட்டு வந்தன. ஆனால், மின்சார ரயில் என்ஜின்கள் பராமரிக்கப்பட வேண்டுமானால் சென்னை பேசின் பிரிட்ஜ் பகுதியில் உள்ள பராமரிப்பு நிலையத்துக்கே அனுப்பப்பட்டு வந்தது.

  இதனால், விரயமாகும் நேரம், மின்சாரம் ஆகியவற்றைத் தவிர்க்கும் வகையில், திருச்சியிலேயே மின்சார ரயில் என்ஜின் பராமரிப்பு நிலையம் அமைக்க ரயில்வே நிர்வாகம் முடிவு செய்தது.

  இதற்காக மின்மயமாக்கல் பிரிவுத் திட்டத்தின் கீழ் | 90 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதன்படி, திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையம் குட்ஷெட் பகுதியில் புதிய பராமரிப்பு நிலையம் அமைக்கும் பணி கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தது.   தற்போது இந்தப் பணிகள் முழுமையடைந்து மின்சார ரயில் என்ஜின்களை பராமரிக்கும் அளவுக்குத் தயாராகிவிட்டது. ஒரு மின்சார ரயில் என்ஜினை முழுமையாகப் பராமரிக்கும் வகையில் இங்கு அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.

  மின்சார ரயில் என்ஜினின் அடிப் பகுதியில் ஏற்படும் பழுதை நீக்கும் வகையில் இரண்டு தண்டவாளக் குழிகள் (பிட் லைன்) அமைக்கப்பட்டுள்ளன. இதுதவிர, ரயின் என்ஜினின் மேற்கூரைப் பகுதியில் ஏற்படும் பழுதைச் சரிசெய்யும் வகையில் "சர்க்கிள் பிரேக்கர்' வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.  மேலும், ஜங்ஷன் ரயில் நிலையத்திலிருந்து பராமரிப்பு நிலையம் வரை என்ஜின் சென்று திரும்பும் வகையில் மின்சாரக் கம்பிகள் அமைக்கப்பட்டுள்ளன. மின்சார வயருடன் இணைக்கும் பகுதியில் ஏற்படும் பழுதை நீக்கும் வகையில், மின்சாரத்தை நிறுத்தி மீண்டும் இணைக்கும் வசதியும் இந்தப் பராமரிப்பு நிலையத்தில் உள்ளது.

  பொதுவாக, ஒரு மின்சார ரயில் என்ஜின் 2,500 என்ஜின் கிலோ மீட்டர் ஓடிய பிறகு பராமரிப்புக்கு அனுப்ப வேண்டும் என்பதும், சரக்குப் பெட்டிகளை இழுத்துச் செல்லும் மின்சார ரயில் என்ஜின் 20 நாள்களுக்கு ஒரு முறை பராமரிப்புக்கு அனுப்பப்பட வேண்டும் என்பதும் விதிமுறை.

  இவை முழுமையாகக் கடைப்பிடிக்கப்படும் வகையில் தற்போது அமைக்கப்பட்டுள்ள மின்சார ரயில் என்ஜின் பழுது நீக்கும் மையம் உருவாக்கப்பட்டுள்ளதாக ரயில்வே மின்மயமாக்கல் பிரிவு உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.  இதுகுறித்து அவர் மேலும் கூறியது:

  "திருச்சி ரயில்வே கோட்டத்தில் ஏறத்தாழ 30 மின்சார ரயில் என்ஜிகள் உள்ளன. இவற்றைப் பராமரிக்க சென்னைக்கு அனுப்ப வேண்டும் என்பதால் நேரம் விரயமாகி வந்தது. இனி அந்த நிலை ஏற்பட வாய்ப்பே இல்லை.

  சென்னை- திருச்சி இடையே மின்மயமாக்கல் பணி முடிவடைந்த நிலையில், தற்போது மதுரை வரை நீட்டிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்தப் பணி முடிவடைந்த பிறகு, பராமரிப்பு நிலையத்தில் பங்கு மிகவும் அவசியமானதாக இருக்கும். ஓரிரு நாளில் இந்தப் பராமரிப்பு மையம் செயல்பாட்டுக்கு வரும்' என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமமுகவிற்கான தொகுதி உடன்படிக்கை பாஜக மூலம் நடைபெறும்: டிடிவி தினகரன்

டேவிட் மில்லர், டெவால்ட் பிரேவிஸ் அதிரடி: இந்தியாவுக்கு 188 ரன்கள் இலக்கு!

சென்னையில் முதல்வர் மு. க. ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச்செயலர் கே. சி. வேணுகோபால் ஆலோசனை!

பாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல் செய்ய 90 கோடி டாலர் ஒப்பந்தம்: சோமாலியா பேச்சுவார்த்தை

இணைந்து செயல்படுவதுதான் முன்னேற்றத்துக்கு உறுதுணை: சி.பி. ராதாகிருஷ்ணன்

SCROLL FOR NEXT