திருச்சி

ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கு ஓய்வூதியம் கிடைக்குமா?

தஞ்சாவூர், ஜூலை 27: தஞ்சை சரஸ்வதி மகால் நூலகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள், 20 ஆண்டுகள் ஆகியும் இதுவரை கிடைக்காமல் உள்ள ஓய்வூதியம் இனியாவது கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர்.    உலகின் சிறந்

ஆர்.​ ​ தங்கராஜு

தஞ்சாவூர், ஜூலை 27: தஞ்சை சரஸ்வதி மகால் நூலகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள், 20 ஆண்டுகள் ஆகியும் இதுவரை கிடைக்காமல் உள்ள ஓய்வூதியம் இனியாவது கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர்.

   உலகின் சிறந்த நூலகங்களில் ஒன்றாகக் கருதப்படும் தஞ்சை சரஸ்வதி மகால் நூலகத்துக்கு பல்வேறு சிறப்புகள் உள்ளன.

ஆனால், கடந்த 1988 ஆண்டுக்கு முன்பு இந்த நூலகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற 22 பேருக்கு இதுவரை ஓய்வூதியப் பலன்கள் எதுவும் கிடைக்கவில்லை.

   19.3.1989-ல் அரசு ஊழியர்களுக்கு இணையான ஓய்வூதியப் பயன்களை வழங்க வலியுறுத்தி ஓய்வு பெற்ற நூலகப் பணியாளர்கள் உண்ணாவிரதம் இருந்தனர்.

இந்தப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து ஒரு நாள் நூலகம் பூட்டப்பட்டதன் விளைவாக, அன்றைய மாவட்ட ஆட்சியரின் பரிந்துரையை ஏற்று தமிழக அரசு ஓய்வூதியம் வழங்க சம்மதித்தது.

   பின்னர் கல்வித் துறை துணைச் செயலர் ஞானராஜ் மூலம் ஓய்வூதிய விதிகள் தயாரிக்கப்பட்டன. பள்ளிக் கல்வித் துறை அமைச்சரை தலைவராக கொண்ட நூலக ஆளுமைக் குழுக் கூட்டத்தில், 26.9.1992-ல் ஞானராஜ் தயாரித்த ஓய்வூதிய விதிகளை ஏற்றுக் கொண்ட பிறகும், ஆய்வு என்ற பெயரில் தாமதம் செய்யப்பட்டது.

   60 வயது வரை பணியாற்ற இருந்த ஊழியர்களுக்கு ஓய்வூதியம் வழங்குவதாகக் கூறி, 58 வயதில் ஓய்வு பெறச் செய்ததால், ஓய்வூதியம் கிடைக்காமல் ஏமாற்றம் அடைந்த ஊழியர்கள், 1.12.1994 முதல் 10.12.1994 வரை 10 நாள்கள் தொடர் உண்ணாவிரதம் இருந்தனர்.

பின்னர், அன்றைய ஆட்சியரின் நடவடிக்கையில் ரூ. 375 ஓய்வூதியம் வழங்கப்பட்டது.

   ஆனால், முழு ஓய்வூதியம் கேட்டு 1995-ல் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடந்த வழக்கு விசாரணையின் முடிவில் 1.4.1995 முதல் ஞானராஜ் தயாரித்த ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைபடுத்த 3 மாத கால அவகாசம் அளித்து 3.2.1997-ல் தீர்ப்பளிக்கப்பட்டது.

   நீதிமன்ற காலக்கெடு முடிந்த பின்பும் அரசின் உத்தரவு வராத நிலையில் 16.6.1997 முதல் 25.6.1997 முடிய 10 நாள்கள் மீண்டும் தொடர் உண்ணாவிரதம் இருந்தனர்.

இதன் பயனாக 1.6.1997 முதல் ரூ. 500 ஓய்வூதியம் வழங்கப்பட்டது.

   ஆனாலும், முழு ஓய்வூதியம் கிடைக்காமல் தொடர்ந்து ஏமாற்றத்தை சந்தித்த ஊழியர்கள், நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடர்ந்த நிலையில், 5.6.1998 முதல் ரூ. 635 வழங்கப்பட்டது. அதைத்தொடர்ந்து, அரசின் கடிதம் அனைத்திலும் ஓய்வூதிய விதிகள் ஆய்வில் உள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.

  இந்நிலையில்,  23.9.1994 நூலக இயக்குநர் என்ற முறையில் மாவட்ட ஆட்சியர் மூலம் ஓய்வூதிய வரைவு விதிகள் தயாரிக்கப்பட்டு அரசு பெற்றுக் கொண்டது.

ஆட்சியர் நூலக இயக்குநர் என்ற முறையில 4 ஆண்டுகளுக்கு பிறகு ஒரு வரைவு ஓய்வூதிய விதிகளை தயாரித்து அரசுக்கு அனுப்பினார்.

அதையும் ஆளுமைக் குழுக் கூட்டம் விதிமுறைகளில் மாற்றம் செய்ய வேண்டும் எனக் கூறி கிடப்பில் போட்டது.

   பின்னர், தஞ்சையில் 2005 மற்றும் 2006 நடைபெற்ற ஓய்வூதியக் கோரிக்கை நாள் கூட்டத்தில் இயக்குநர், உயர் அலுவலர்கள், தொடர்புடையை அமைச்சர் மற்றும் முதல்வருக்கு நேரிலும், கடிதம் மூலமூம் விண்ணப்பித்ததன் பயனாக 1.4.2006 வரை ஓய்வூதியம் வழங்கப்பட்டது.

    நூலகத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு தமிழக அரசின் திருத்தி அமைக்கப்பட்ட 6-வது ஊதியக் குழுவின் பரிந்துரைகள் அனைத்தும் வழங்கிய தமிழக அரசு, ஓய்வு பெற்ற ஊழியர்கள் குறித்து எதுவும் அறிவிக்கவில்லை.

நூலக நிதி ரூ. 1 கோடி உள்ளது. அந்த நிதியைக் கொண்டு ஓய்வூதியச் சலுகைகள நடைமுறைப்படுத்தலாம்.

அரசின் உத்தரவு இல்லாத காரணத்தால் பணியாளர்கள் எந்த பயனும் அடைய முடியவில்லை.

   ஓய்வூதியம் வழங்கக் கோரி உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட அறப் போராட்டங்கள் மூலம் அரசின் கவனத்துக்கு கொண்டு சென்றும் எந்த பயனும் இல்லை.

ஓய்வு பெற்றவர்கள் 22 பேரில் 6 பேர் இறந்து விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அவர்களுக்கு அளிக்கப்பட வேண்டிய ஓய்வூதியத் தொகை குறைந்தபட்சம் ரூ. 30 லட்சத்துக்குள் இருக்கும். அரசுக்கு இது ஒன்றும் பெரிய தொகையல்ல. நூலக நிதியிலிருந்தே கொடுக்கலாம்.

  அரசின் பொறுப்பில் செயல்படும் நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களுக்கு ஓய்வூதியத் தொகை அவர்களின் வாழ்க்கையை நடத்த பெரிதும் உதவியாக இருக்கும்.

நூலக நிர்வாகம் ஏனோ ஓய்வுபெற்றவர்களுக்கு ஓய்வூதிய பலன்களை கொடுக்காமல் காலதாமதம் செய்து வருகிறது.

    ஏதேதோ காரணங்களுக்காக லட்சக்கணக்கில் செலவு செய்ய முக்கியத்துவம் அளிக்கும் நிர்வாகம், பணியாளர்களின் நலனுக்கும் முக்கியத்துவம் அளித்து ஓய்வூதியம் கிடைக்க, நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதே பாதிக்கப்பட்ட ஓய்வூதியர்களின் எதிர்பார்ப்பு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமமுகவிற்கான தொகுதி உடன்படிக்கை பாஜக மூலம் நடைபெறும்: டிடிவி தினகரன்

டேவிட் மில்லர், டெவால்ட் பிரேவிஸ் அதிரடி: இந்தியாவுக்கு 188 ரன்கள் இலக்கு!

சென்னையில் முதல்வர் மு. க. ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச்செயலர் கே. சி. வேணுகோபால் ஆலோசனை!

பாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல் செய்ய 90 கோடி டாலர் ஒப்பந்தம்: சோமாலியா பேச்சுவார்த்தை

இணைந்து செயல்படுவதுதான் முன்னேற்றத்துக்கு உறுதுணை: சி.பி. ராதாகிருஷ்ணன்

SCROLL FOR NEXT