33 கி.மீ. தூரத்தில் 102 வளைவுகள்: செய்யாறு- ஆரணி சாலை சீரமைக்கப்படுமா?
செய்யாறு,நவ. 13: செய்யாறில் இருந்து ஆரணிக்குச் செல்லும் சாலையில் 102 வளைவுகள் உள்ளதால், வாகன ஓட்டிகள் சிரமப்பட்டு சாலையை கடக்கின்றனர். இச்சாலையை சீரமைக்க வேண்டும் என்று அவர்கள் எதிர்பார்க்கின்றனர். இ
திருச்சி33 கி.மீ. தூரத்தில் 102 வளைவுகள்: செய்யாறு- ஆரணி சாலை சீரமைக்கப்படுமா?
செய்யாறு,நவ. 13: செய்யாறில் இருந்து ஆரணிக்குச் செல்லும் சாலையில் 102 வளைவுகள் உள்ளதால், வாகன ஓட்டிகள் சிரமப்பட்டு சாலையை கடக்கின்றனர். இச்சாலையை சீரமைக்க வேண்டும் என்று அவர்கள் எதிர்பார்க்கின்றனர். இ
செய்யாறு,நவ. 13: செய்யாறில் இருந்து ஆரணிக்குச் செல்லும் சாலையில் 102 வளைவுகள் உள்ளதால், வாகன ஓட்டிகள் சிரமப்பட்டு சாலையை கடக்கின்றனர். இச்சாலையை சீரமைக்க வேண்டும் என்று அவர்கள் எதிர்பார்க்கின்றனர்.
இச்சாலையை அகலப்படுத்தும் பணி தொடங்கப்பட்டும், நிறைவு பெறமால் உள்ளது. இதனால், மேல்புதுப்பாக்கம், லாடப்பாடி, நேத்தப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் சாலையின் ஒரு புறத்தில் பள்ளம் தோண்டி எடுக்கப்பட்டும், பணி முடிக்கப்படாமல் உள்ளதால் வாகன ஓட்டிகள் சிரமத்துடனே செல்கின்றனர்.
மேலும், பைங்கிணர், அருகாவூர், பெரும்பள்ளம், சுண்டிவாக்கம், தண்டரை, சேராம்பட்டு, இருங்கூர், தட்டச்சேரி ஆருர் மடுவு, பனையூர், மாமண்டூர், இரும்பேடு உள்ளிட்ட பகுதிகளில் 102 வளைவுகள் உள்ளதாகவும் மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இச்சாலை வழியாகத்தான் காஞ்சிபுரம், திருவண்ணாமலை, சேலம், சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கு போக்குவரத்து நடைபெறுகிறது. இதோடு, ஆரணி, களம்பூர் பகுதிகளில் உற்பத்தியாகும் அரிசி, செங்கல் உள்ளிட்ட பொருள்களும் லாரிகளில் சென்னைக்கு எடுத்து செல்லப்படுகிறது.
அதிக அளவு போக்குவரத்து உள்ள சாலை சீரமைக்கப்படாமல் உள்ளதால், மக்களும், வாகன ஓட்டிகளும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர்.
சாலைகள் சேதம்
இதோடு, இச்சாலையில் நேரு நகர், வடதண்டலம், சிவபுரம், கன்னுகாபுரம், ஆருர்மடுவு பனையூர், மேல்புதுப்பாக்கம், லாடப்பாடி உள்ளிட்ட பகுதிகளில் சாலை சேதம் அடைந்துள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இச்சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்டவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.