மழைக் காப்பீட்டுத் திட்ட நடைமுறைகள் மாற்றப்படுமா?
ஆலங்குடி,செப். 9: மத்திய அரசின் வேளாண் காப்பீட்டு நிறுவனத்தால் அறிவிக்கப்பட்டுள்ள மழைக் காப்பீட்டுத் திட்டத்தில் பிரிமியம் செலுத்தும் நடைமுறைகளை மாற்ற வேண்டும் என்று விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.
ஆலங்குடி,செப். 9: மத்திய அரசின் வேளாண் காப்பீட்டு நிறுவனத்தால் அறிவிக்கப்பட்டுள்ள மழைக் காப்பீட்டுத் திட்டத்தில் பிரிமியம் செலுத்தும் நடைமுறைகளை மாற்ற வேண்டும் என்று விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.
மத்திய அரசின் வேளாண் காப்பீட்டு நிறுவனம் தமிழகத்தில் நிகழாண்டில் நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், கடலூர், திருவண்ணாமலை, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், புதுக்கோட்டை ஆகிய 9 மாவட்டங்களில் "வர்ஷா பீமா' என்ற பெயரில் மழைக் காப்பீட்டுத் திட்டத்தை அமலாக்கியுள்ளது.
மழையின்மை, தொடர் வறட்சி, கூடுதல் மழை ஆகியவற்றால் ஏற்படும் பாதிப்புகளுக்கு விவசாயிகள் இழப்பீடு பெறும் வகையில் இத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் நிகழாண்டில் சம்பா நெல் மற்றும் மிளகாய் பயிருக்கு காப்பீடு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான பயிர்க் காப்பீட்டுத் தொகை அந்தந்த ஒன்றியத்துக்கேற்ப நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதிகபட்ச இழப்பீட்டுத் தொகை | 6 ஆயிரம் ஆகும்.
பொதுவாக, விவசாயிகள் இந்தத் திட்டத்தை வரவேற்றுள்ள நிலையில், திட்டத்தில் பிரிமியம் செலுத்தும் நடைமுறையை மட்டும் மாற்ற வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர்.
அதிக பிரிமியமும் சிக்கலான நடைமுறையும்: இந்தத் திட்டத்தில் சேர காப்பீட்டு நிறுவனம் இப்போது அறிவித்துள்ள பிரிமியம் அதிகமாக இருப்பதாக விவசாயிகள் கூறுகின்றனர். பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தைப்போல ஏறத்தாழ மூன்று மடங்கு இந்த பிரிமியம் அதிகம் இருப்பதாக அவர்கள் கூறுகின்றனர்.
பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தில் ஓர் ஏக்கருக்கான பிரிமியம் சுமார் |100 ஆகும். ஆனால், மழைக் காப்பீட்டுத் திட்டத்திலோ ஓர் ஏக்கருக்கான பிரிமியம் |550 ஆகும். அரசு இந்தத் திட்டத்தில் பங்களிப்புத் தொகை செலுத்தாதே இதற்குக் காரணம் என்று கூறப்படுகிறது.
இதேபோல, இந்த பிரிமியத்ûப் செலுத்த ஒவ்வொரு விவசாயியும் அவர் பெயரில் வங்கிக் கணக்கு தொடங்க வேண்டும். காப்பீடு தொகைக்கான பிரிமியத்தை சென்னையில் மாற்றத் தக்க வலையில் - தேசியமயமாக்கப்பட்ட வங்கி ஏதேனும் ஒன்றில் - அஐஇ ர்ச் ஐய்க்ண்ஹ கற்க். அஷ்ண்ள் ஆஹய்ந் (அஇ சர். 006010200018027) என்ற பெயருக்கு வரைவோலை எடுத்து, சென்னையிலுள்ள அந்நிறுவனத்தின் முகவரிக்கு அனுப்பிவைக்க வேண்டும் என்பதே இத்திட்டத்தில் பிரிமியம் செலுத்தும் நடைமுறையாகும்.
இதுவும் சிக்கலான நடைமுறை என்று விவசாயிகள் கூறுகின்றனர்.
விவசாயிகள் இதற்கு கூறும் காரணங்கள்:
பல கிராமங்களில் தேசியமயமாக்கப்பட்ட வங்கி கிடையாது.
இது கூடுதல் செலவு. வரைவோலைக்கு கூடுதலாக தரகுத் தொகை |30 செலுத்த வேண்டும். அனுப்பிவைக்க குறைந்தபட்சம் |20 அஞ்சல் செலவு ஆகும்.
மேலும், வங்கியில் நேரடியாக பிரிமியம் செலுத்துவதுபோல வரைவோலை சென்றடைந்து, கணக்கு வைக்கப்பட்டதற்கான உத்தரவாதம் இதில் நேரடியாகக் கிடையாது.
அரசு தலையிட வேண்டும்: ஆகையால், இந்த பிரச்னையில் அரசு தலையிட வேண்டும் என்று விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர். பிரிமியத்தில் பங்களிப்புத் தொகை செலுத்துவதோடு, வேளாண் கூட்டுறவு வங்கிகளில் நேரடியாக பிரிமியத்தைச் செலுத்தும் வகையில் நடைமுறையை மாற்ற அரசு உதவ வேண்டும் என்று அவர்கள் கோருகின்றனர்.
இதுகுறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் புதுக்கோட்டை மாவட்டச் செயலர் எஸ்.பி. முத்துக்குமரன் கூறியது:
""விவசாயிகள் நலனுக்காகவே இத்தகைய திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. ஆனால், அவர்களுக்கேற்ப நடைமுறைகள் எளிமையாக இல்லை. அரசு இந்த விஷயத்தில் தலையிட வேண்டும். விவசாயிகள் எதிர்பார்ப்புகளுக்கேற்ப நடைமுறைகளை மாற்ற வேண்டும்'' என்றார் அவர்.