முகப்பு
திருச்சி

கல்விதான் வாழ்க்கைக்கு அடிப்படையானது

ஆலங்குடி, ஜன. 8: கல்விதான் வாழ்க்கைக்கு அடிப்படையானது என்றார் மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம்.   புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி மகளிர் மேல்நிலைப் பள்ளியில்  நாடாளுமன்ற உறுப்பினரின் நிதியில் 2004

Updated On : 28 டிசம்பர், 2023 at 4:04 PM
பகிர்:

ஆலங்குடி, ஜன. 8: கல்விதான் வாழ்க்கைக்கு அடிப்படையானது என்றார் மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம்.

  புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி மகளிர் மேல்நிலைப் பள்ளியில்  நாடாளுமன்ற உறுப்பினரின் நிதியில் 2004-2005 ஆம் ஆண்டில் மத்திய முன்னாள் இணை அமைச்சர் எஸ். ரகுபதி சார்பில் ரூ. 4.5 லட்சத்தில் கட்டப்பட்டு திறக்கப்பட்ட இரண்டு வகுப்பறைக் கட்டடங்களின் மேல்தளத்தில் மத்திய உள்துறை அமைச்சர் சார்பில் ரூ. 7 லட்சத்தில் கட்டப்பட்ட இரண்டு வகுப்பறைக் கட்டங்களைத் திறந்துவைத்து அவர் மேலும் பேசியது:

  கல்விதான் வாழ்க்கைக்கு அடிப்படையானது, அவசியமானது. அதை இளமையில் மட்டும்தான் கற்க முடியும். கல்வியை அனைவரும் கற்க வேண்டும் என்ற நோக்கில் மத்திய, மாநில அரசுகள் கல்விக்கு அதிக முக்கியத்துவம் செலுத்தி வருகின்றன.

 கல்விக்காக நிகழாண்டில் மத்திய அரசு ரூ. 50 கோடியை செலவிட்டுள்ளது.

   நம் நாட்டில் அரசியல் கட்சித் தலைவர்கள், குடியரசுத் தலைவர், பேராசிரியர், பொறியாளர், விண்வெளி ஆராய்ச்சியாளர் என பல்வேறு முக்கியப் பொறுப்புகளில் பெண்கள்தான் உள்ளனர்.

  மாணவிகள் தங்களிடம் உள்ள தாழ்வு மனப்பான்மையை அகற்ற வேண்டும். அதற்கு ஆசிரியர்கள் உறுதுணையாக இருக்க வேண்டும் என்றார் சிதம்பரம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.