முகப்பு
திருச்சி

திருப்பாவை ஒப்புவித்தல் போட்டி

தஞ்சாவூர், ஜன. 8: தஞ்சாவூர் சாஸ்த்ரா பல்கலைக்கழகம் சார்பில் திருப்பாவை மற்றும் திருவெம்பாவை பாடல்கள் ஒப்புவித்தல் போட்டி ஜன.13 ஆம் தேதி காலை 9 மணிக்கு நடைபெறவுள்ளது.  இதுகுறித்து அந்தப் பல்கலைக்கழகம்

Updated On : 28 டிசம்பர், 2023 at 4:04 PM
பகிர்:

தஞ்சாவூர், ஜன. 8: தஞ்சாவூர் சாஸ்த்ரா பல்கலைக்கழகம் சார்பில் திருப்பாவை மற்றும் திருவெம்பாவை பாடல்கள் ஒப்புவித்தல் போட்டி ஜன.13 ஆம் தேதி காலை 9 மணிக்கு நடைபெறவுள்ளது.

 இதுகுறித்து அந்தப் பல்கலைக்கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

   தஞ்சாவூர், கும்பகோணம் பகுதியை மையமாகக் கொண்டு 10 கிலோ மீட்டர் சுற்றளவில் உள்ள உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் பள்ளிக்கு இருவர் வீதம் இதில் பங்கேற்கலாம். போட்டியாளர் 15 வயதுக்குள் இருக்க வேண்டும். அனைத்து பாசுரங்களையும் ஒப்புவிக்க வேண்டும்.

  தஞ்சாவூர் பகுதியைச் சேர்ந்தவர்களுக்கு தஞ்சாவூர் பல்கலையிலும், கும்பகோணம் பகுதியைச் சேர்ந்தவர்களுக்கு கும்பகோணம் ஸ்ரீராமானுஜம் மையத்திலும் போட்டி நடைபெறும். இந்தப் போட்டியில் பங்கேற்கும் அனைவருக்கும் ஊக்கப்பரிசாக ரூ. 500-ம், முதல் பரிசாக ரூ. 3,000, 2 ஆம் பரிசாக ரூ. 2,000, 3 ஆம் பரிசு ரூ. 1,000 மும் வழங்கப்படும்.

  இதில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள் தாங்கள் பயிலும் பள்ளியில் தலைமையாசிரியர் மூலமாக போட்டி நடக்கும் 3 நாள்களுக்கு முன்பு (ஜன.10) பெயரைப் பதிவு செய்து கொள்ள வேண்டும்.

முழு கட்டுரையைப் படிக்க →