பிளாஸ்டிக் உபயோகத்திற்கு தடைவிதிக்க வலியுறுத்தல்
கரூர், ஜன. 8: கரூர் மாவட்டத்தில் பிளாஸ்டிக் பொருள்களை உபயோகிக்க தடை விதித்து, தடையாணை பிறப்பிக்க வேண்டுமென மனித உரிமைகள் கழகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இந்த அமைப்பின் கரூர் மாவட்ட ஆலோசனைக் கூட்டம்
திருச்சிபிளாஸ்டிக் உபயோகத்திற்கு தடைவிதிக்க வலியுறுத்தல்
கரூர், ஜன. 8: கரூர் மாவட்டத்தில் பிளாஸ்டிக் பொருள்களை உபயோகிக்க தடை விதித்து, தடையாணை பிறப்பிக்க வேண்டுமென மனித உரிமைகள் கழகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இந்த அமைப்பின் கரூர் மாவட்ட ஆலோசனைக் கூட்டம்
கரூர், ஜன. 8: கரூர் மாவட்டத்தில் பிளாஸ்டிக் பொருள்களை உபயோகிக்க தடை விதித்து, தடையாணை பிறப்பிக்க வேண்டுமென மனித உரிமைகள் கழகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இந்த அமைப்பின் கரூர் மாவட்ட ஆலோசனைக் கூட்டம் தலைமை அமைப்பாளர் எஸ். ஜெயராஜ் தலைமையில் அண்மையில் நடைபெற்றது.
கூட்டத்தில் கரூர் மாவட்டத்திலுள்ள கரூர், இனாம்கரூர், தாந்தோன்றிமலை நகராட்சிகளில் பிளாஸ்டிக் பொருள்களை பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டும், அந்த விதிகள் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை.
எனவே, கரூர் மாவட்டத்தில் பிளாஸ்டிக் பொருள்களை பயன்படுத்துவதற்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்து, அதைக் கண்காணிக்க வேண்டும்.
ஒரு நகராட்சியில் சராசரியாக 1 லட்சத்து 86 ஆயிரம் கிலோ பிளாஸ்டிக் கழிவுகள் கொட்டப்படுகின்றன. இதனால், சுற்றுச்சூழல் பாதிப்பும், சுகாதாரக் கேடும் ஏற்படும் நிலை உள்ளதால், பிளாஸ்டிக் பொருள்களுக்கு தடைவிதிக்க வேண்டும் எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.