மாநில பூப்பந்தாட்டப் போட்டி: திருவாரூர் மாணவிகள் இரண்டாமிடம்
திருவாரூர், ஜன. 8: மாநில அளவிலான பூப்பந்தாட்டப் போட்டியில் திருவாரூர் ஜி.ஆர்.எம். பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் இரண்டாமிடம் பெற்றனர். 2010 - 2011-ம் கல்வி ஆண்டுக்கான 28-வது மாநில அளவிலான பாரதிய
திருவாரூர், ஜன. 8: மாநில அளவிலான பூப்பந்தாட்டப் போட்டியில் திருவாரூர் ஜி.ஆர்.எம். பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் இரண்டாமிடம் பெற்றனர்.
2010 - 2011-ம் கல்வி ஆண்டுக்கான 28-வது மாநில அளவிலான பாரதியார் பிறந்த தின விளையாட்டுப் போட்டிகள் டிச. 27 முதல் 29-ம் தேதி வரை வேலூரில் நடைபெற்றன. இதில் பூப்பந்தாட்டப் போட்டியில் திருவாரூர் ஜி.ஆர்.எம். பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் பங்கேற்று மாநில அளவில் இரண்டாமிடம் வென்றனர்.
இம் மாணவிகளை பள்ளித் தாளாளர் எம். பெரியசாமி, தலைமையாசிரியை ஆர். ரத்தினகுமாரி மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.