திருச்சி

நெல்லையில் துவரம் பருப்பு விலை குறைவு

திருநெல்வேலி, மே 18: திருநெல்வேலி சந்தையில் துவரம் பருப்பு ஒரு கிலோவுக்கு ரூ. 6 குறைந்தது. மற்ற பருப்பு வகைகளில் பெரிய அளவில் மாற்றம் இல்லை. கடந்த சில வாரங்களாக விலை அதிகரித்து வந்த துவரம் பருப்பு இந்

தினமணி

திருநெல்வேலி, மே 18: திருநெல்வேலி சந்தையில் துவரம் பருப்பு ஒரு கிலோவுக்கு ரூ. 6 குறைந்தது. மற்ற பருப்பு வகைகளில் பெரிய அளவில் மாற்றம் இல்லை.

கடந்த சில வாரங்களாக விலை அதிகரித்து வந்த துவரம் பருப்பு இந்த வாரம் ஓரளவு குறையத் தொடங்கியுள்ளது. 100 கிலோ எடை கொண்ட ஒரு மூட்டை முதல் ரக துவரம் பருப்பு கடந்த வாரம் ரூ. 6,600-க்கு விற்கப்பட்டது.

ஆனால், இப்போது மூட்டைக்கு ரூ. 600 குறைந்து ரூ. 6000-க்கு விற்கப்படுகிறது. கடந்த வாரம் சில்லறை விலையில் ஒரு கிலோ ரூ. 70-க்கு விற்கப்பட்ட துவரம் பருப்பு இப்போது ரூ. 60-க்கு விற்கப்படுகிறது.

இதேபோல, 100 கிலோ எடை கொண்ட துவரம் பருப்பு இரண்டாவது ரகம் கடந்த வாரம் ரூ. 5,800-க்கு விற்கப்பட்டது. இந்த வாரம் ரூ. 500 குறைந்து ஒரு மூட்டை ரூ. 5,300-க்கு விற்கப்படுகிறது.

தேர்தல் சமயத்தில் ஒப்பந்தம் விடப்படுவது நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததால் இப்போது வரத்து அதிகரித்துள்ளது. இதனால், துவரம் பருப்பின் விலை குறைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

ஆனால், தொலி பருப்பு விலை சற்று அதிகரித்து உள்ளது. கடந்த வாரம் ரூ. 5,400-க்கு விற்கப்பட்ட ஒரு மூட்டை தொலி பருப்பு இந்த வாரம் ரூ. 5,800 ஆக அதிகரித்துள்ளது. சில்லறை விலையில் ஒரு கிலோ ரூ. 58-க்கு விற்கப்பட்ட தொலி பருப்பு இந்த வாரம் ரூ. 60-க்கு விற்கப்படுகிறது.

100 கிலோ எடை கொண்ட ஒரு மூட்டை பாசிப் பருப்பு கடந்த வாரம் ரூ. 6,800-க்கு விற்கப்பட்டது. இந்த வாரம் ரூ. 1,000 குறைந்து ஒரு மூட்டை ரூ. 5,800-க்கு விற்கப்படுகிறது.

100 கிலோ எடை கொண்ட ஒரு மூட்டை கடலை பருப்பு கடந்த வாரம் ரூ. 3,600-க்கு விற்கப்பட்டது. இந்த வாரம் ரூ. 350 குறைந்து ஒரு மூட்டை ரூ. 3,250-க்கு விற்கப்படுகிறது.

100 கிலோ எடை கொண்ட ஒரு மூட்டை உருட்டு பருப்பு (முதல் ரகம்) கடந்த வாரம் ரூ. 6,700-க்கு விற்கப்பட்டது. இந்த வாரம் ரூ. 75 அதிகரித்து, ஒரு மூட்டை ரூ. 6,775-க்கு விற்கப்படுகிறது.

100 கிலோ எடை கொண்ட ஒரு மூட்டை உருட்டு பருப்பு (இரண்டாவது ரகம்) கடந்த வாரம் ரூ. 5,300-க்கு விற்கப்பட்டது. இந்த வாரம் ரூ. 800 அதிகரித்து, ஒரு மூட்டை ரூ. 6,100-க்கு விற்கப்படுகிறது.

100 கிலோ எடை கொண்ட ஒரு மூட்டை பட்டாணி பருப்பு கடந்த வாரம் ரூ. 2,250-க்கு விற்கப்பட்டது. இந்த வாரம் ரூ. 300 அதிகரித்து, ஒரு மூட்டை ரூ. 2,550-க்கு விற்கப்படுகிறது.

ரூ. 2,600 முதல் ரூ. 2,700 வரை விற்கப்பட்டு வந்த 40 கிலோ மல்லி இந்த வாரம் சற்று குறைந்து, ரூ. 2,150 முதல் ரூ. 2,450 வரை விற்கப்படுகிறது.

பூண்டு, வத்தல், வெங்காயம், சின்ன வெங்காயம் ஆகியவற்றின் விலையில் பெரிய அளவில் மாற்றமில்லை.

எண்ணெய் ரகங்களில் பெரிய அளவில் மாற்றம் எதுவும் இல்லை. கடந்த வாரம் ரூ. 1,150-க்கு விற்கப்பட்ட நல்லெண்ணெய் பிருந்தாவன் 16 கிலோ இந்த வாரம் ரூ. 1,170-க்கு விற்கப்படுகிறது. ரூ. 1,200-க்கு விற்கப்பட்ட துளசி ரகம் ரூ. 1,150-க்கு விற்கப்படுகிறது.

கடந்த வாரம் ரூ. 1,350-க்கு விற்கப்பட்ட 16 கிலோ கடலை எண்ணெய் இந்த வாரம் ரூ. 1,400-க்கு விற்கப்படுகிறது. தேங்காய் எண்ணெய் 16 கிலோவுக்கு ரூ. 20 குறைந்து, இந்த வாரம் ரூ. 1,780-க்கு விற்கப்படுகிறது.

பாமாயில் 15 கிலோவுக்கு ரூ. 10 அதிகரித்து, இந்த வாரம் ரூ. 910-க்கு விற்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 5

உலகத் தரத்தில் VFX காட்சிகள்! ஆனால் கதை? - AVATAR 3 திரைவிமர்சனம்

தி​ரு​மண பாக்​கி​யம் அரு​ளி​டும் திரு​மால்

அர​வணை மேல் பள்ளி கொண்ட முகில் வண்​ணன்

வார பலன்கள் - மீனம்

SCROLL FOR NEXT