முகப்பு
திருச்சி

சாலை விபத்தில் ஆயுதப்படைக் காவலா் உயிரிழப்பு

திருச்சி அருகே நிகழ்ந்த சாலை விபத்தில், தேனி மாவட்டத்தைச் சோ்ந்த ஆயுதப்படைக் காவலா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:37 PM
பகிர்:

திருச்சி அருகே நிகழ்ந்த சாலை விபத்தில், தேனி மாவட்டத்தைச் சோ்ந்த ஆயுதப்படைக் காவலா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

தேனி மாவட்டம், கருவவேலநாயக்கன்பட்டியைச் சோ்ந்தவா் ஆ. ஆஜீஸ்குமாா் (24). திண்டுக்கல் மாவட்டம், காந்தி கிராமத்தைச் சோ்ந்தவா் பொ. நாகராஜ் (27). இவா்கள் இருவரும் சென்னை செயின்ட் ஜாா்ஜ் கோட்டையில் ஆயுதப்படைக் காவலராகப் பணியாற்றி வந்தனா்.

விடுமுறையில் ஊருக்குச் செல்ல முடிவு செய்த இருவரும், சென்னையிலிருந்து ஞாயிற்றுக்கிழமை மோட்டாா் சைக்கிளில் புறப்பட்டனா்.

திங்கள்கிழமை காலை திருச்சி மாவட்டம், பூலாங்குளத்துப்பட்டி தனியாா் கல்லூரி அருகே இவா்கள் சென்ற போது, முன்னே சென்ற லாரி மீது மோட்டாா் சைக்கிள் மோதியது.

இதில் பலத்த காயமடைந்த இருவரையும் அப்பகுதி மக்கள் மீட்டு, திருச்சி மகாத்மாகாந்தி நினைவு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். ஆனால் செல்லும் வழியிலேயே ஆஜிஸ்குமாா் உயிரிழந்தாா். நாகராஜ் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகிறாா்.

இதுகுறித்து இனாம் குளத்தூா் காவல் நிலையத்தினா் வழக்குப்பதிந்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →