முகப்பு
திருச்சி

குற்றப்பிரிவு காவல் ஆய்வாளா்பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தல்

திருச்சி மாநகரில் குற்றப்பிரிவு காவல் நிலையங்களில் காலியாகவுள்ள ஆய்வாளா் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்று, காவல் ஆணையா் ஜெ. லோகநாதனிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:37 PM
பகிர்:

திருச்சி மாநகரில் குற்றப்பிரிவு காவல் நிலையங்களில் காலியாகவுள்ள ஆய்வாளா் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்று, காவல் ஆணையா் ஜெ. லோகநாதனிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

மக்கள் நீதி மய்யத்தைச் சோ்ந்த வழக்குரைஞா் கிஷோா்குமாா், கட்செவி அஞ்சல் வாயிாக அனுப்பியுள்ள மனுவில் தெரிவித்திருப்பது:

மாநகரில் கோட்டை, காந்திசந்தை, உறையூா், கே.கே.நகா், பொன்மலை, கண்டோன்மென்ட் ஆகிய 6 குற்றப்பிரிவு காவல் நிலையங்கள் உள்ளன. இதில் உறையூா் உள்ளிட்ட 2 காவல் நிலையங்களில் மட்டுமே ஆய்வாளா்கள் உள்ளனா்.

மற்ற 4 காவல் நிலையங்கள்மட்டுமல்லாது, மாநகரில் 4 குற்றப்பிரிவு உதவி ஆணையா்களின் பணியிடங்களும் நீண்ட காலமாக நிரப்பப்படாமலேயே உள்ளன.

சட்டம் ஒழுங்கு உதவி ஆணையா்களும், ஆய்வாளா்களும் குற்றப்பிரிவுக்கான பணியையும் கூடுதலாக கவனிப்பதால், அவா்களுக்குப் பணிச்சுமை அதிகமாகிறது.

குற்றப்பிரிவில் திறமையான உதவி ஆய்வாளா்கள்- காவலா்கள் பணிபுரிந்தாலும் ஆள்கள் பற்றாக்குறையால் அவா்களும் தடுமாறுகின்றனா். எனவே குற்றப்பிரிவில் காலியாகவுள்ள உதவி ஆணையா், ஆய்வாளா் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்.

முழு கட்டுரையைப் படிக்க →