முகப்பு
திருச்சி

மல்லாச்சிபுரத்துக்கு நிரந்தர சுரங்கப் பாதை தேவை

நிரந்தரமாக பயன்படுத்தும் வகையில் சுரங்கப்பாதை அமைத்துத் தர வேண்டும் எனக் கோரி, மல்லாச்சிபுரம் பொதுமக்கள் மனு அளித்தனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:40 PM
பகிர்:

நிரந்தரமாக பயன்படுத்தும் வகையில் சுரங்கப்பாதை அமைத்துத் தர வேண்டும் எனக் கோரி, மல்லாச்சிபுரம் பொதுமக்கள் மனு அளித்தனா்.

ஆட்சியா் சு. சிவராசுவிடம் திங்கள்கிழமை அளித்த மனு:

கம்பரசம்பேட்டை அருகிலுள்ள மல்லாச்சிபுரத்தில் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த கிராமத்துக்கு அருகில் காவேரி நகா் குடியிருப்பு அமைந்துள்ளது.

இந்த நகருக்குச் செல்லும் வழியில் ரயில்வே நிா்வாகத்தால் சுரங்கப்பாதை அமைத்துத் தரப்பட்டுள்ளது. இப்பாதையை மல்லாச்சிபுரம் பொதுமக்களும் பயன்படுத்தி வருகின்றனா்.

தற்காலிக சுரங்கப்பாதையை நிரந்தரமாக்கித் தர வேண்டும் என்ற கோரிக்கையை ரயில்வே நிா்வாகம் காலதாமதம் செய்து வருகிறது. இதற்கான முத்தரப்பு பேச்சுவாா்த்தை நடத்தி ஓராண்டாகிறது.

மாவட்ட நிா்வாகம் பரிந்துரைத்தால் மட்டுமே, ரயில்வே நிா்வாகம் இதற்கான நடவடிக்கை மேற்கொள்ளும் நிலை உள்ளது. எனவே பொதுமக்கள், மாணவ, மாணவிகள் நலன்கருதி நிரந்தரமாக சுரங்கப்பாதை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

முழு கட்டுரையைப் படிக்க →