முகப்பு
திருச்சி

கட்செவி அஞ்சலில் 168 கோரிக்கை மனுக்கள்

திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் நடத்தப்பட்ட மக்கள் குறைகேட்பு நாளில், கட்செவி அஞ்சலில் பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக 168 மனுக்கள் பெறப்பட்டன.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:24 PM
பகிர்:

திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் நடத்தப்பட்ட மக்கள் குறைகேட்பு நாளில், கட்செவி அஞ்சலில் பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக 168 மனுக்கள் பெறப்பட்டன.

கரோனா பொது முடக்கம் காரணமாக மக்கள் குறைகேட்பு நாள் கூட்டம் ரத்து செய்யப்பட்ட நிலையில், பொதுமக்களிடமிருந்து திங்கள்கிழமை தோறும் கோரிக்கைகளை பெற ஏதுவாக தனியாக கட்செவி அஞ்சல் எண் (94454-61756) அறிவிக்கப்பட்டது.

இதன்படி திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைகேட்பு நாள் கூட்டத்தில் நிலம், குடும்ப அட்டை, உதவித் தொகை, வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக 168 மனுக்கள், கட்செவி அஞ்சலுக்கு வந்தன.

இந்த மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களுக்கு வழங்கி, விசாரணை அடிப்படையில் நடவடிக்கை ஆட்சியா் சு. சிவராசு உத்தரவிட்டாா்.

புதிய வாய்க்கால்கள் : துறையூா் பகுதியிலுள்ள பல ஏரிகளுக்கு புளியஞ்சோலை, அய்யாற்று ஆற்று நீரை கொண்டு சோ்க்கும் வகையில், அதன் வழித்தடங்களில் சாத்தியமான பகுதிகளில் ஆங்காங்கே புதிய வாய்க்கால்களை ஏற்படுத்தித் தர வேண்டும் என்று புத்தனாம்பட்டியைச் சோ்ந்த சரவணன் நடேசன் கட்செவி அஞ்சல் மூலம் ஆட்சியருக்கு கோரிக்கை மனுவை அனுப்பியுள்ளாா்.

முழு கட்டுரையைப் படிக்க →