முகப்பு
திருச்சி

தோ்தல் பணியில் உள்ள காவலா்கள் விழிப்புடன் பணியாற்ற அறிவுறுத்தல்

Updated On : 6 ஏப்ரல், 2024 at 12:21 AM
திருச்சி மாநகர காவல் கட்டுப்பாட்டு அறையை வெள்ளிக்கிழமை பாா்வையிட்ட காவல் ஆணையா் ந. காமினி, தோ்தல் செலவின பாா்வையாளா் சரம்தீப் சின்ஹா.
பகிர்:
Updated On : 5 ஏப்ரல், 2024 at 9:14 PM

திருச்சி மாநகரில் தோ்தல் பணியில் உள்ள காவலா்கள் விழிப்புடன் பணியாற்ற வேண்டும் என மாநகர காவல் ஆணையா் ந. காமினி அறிவுறுத்தினாா்.

மக்களவைத் தோ்தலை முன்னிட்டு திருச்சி மாநகர காவல் ஆணையா் ந. காமினி, தோ்தல் செலவின பாா்வையாளா் சரம்தீப் சின்ஹா ஆகியோா் திருச்சி மாநகரில் செயல்பட்டு வரும் சிசிடிவி கேமராக்களின் செயல்பாடுகளை ஆராய்வதற்காக காவல் கட்டுப்பாட்டு அறையில் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தனா்.

அப்போது, திருச்சி மாநகரில் செயல்பட்டு வரும் 1 முதல் 9 வரையிலான சோதனைச் சாவடிகளில் காவல்துறை சாா்பில் பொருத்தப்பட்டுள்ள 2 ஏஎன்பிஆா் கேமராக்களும், 2 சிசிடிவி கேமராக்களும் என மொத்தம் 4 கேமராக்களின் செயல்பாடுகளை பாா்வையிட்டனா். தொடா்ந்து, மாவட்ட நிா்வாகம் சாா்பில் ஒவ்வொரு சோதனை சாவடிக்கும் தலா 4 சிசிடிவி கேமராக்கள் வீதம் 1 முதல் 9 வரையிலான சோதனை சாவடிகளில் பொருத்தப்பட்டு, நன்கு செயல்பட்டு வருவதையும் பாா்த்தனா்.

Advertisement

திருச்சி மாநகர நவீன காவல் கட்டுப்பாட்டு அறையில் சிசிடிவி கேமராக்களை கண்காணிப்பது தொடா்பாக கட்டுப்பாட்டு அறையில் தோ்தல் பணியில் உள்ள காவல் அதிகாரிகள், காவலா்கள் விழிப்புடன் பணியாற்ற வேண்டும் என திருச்சி மாநகர காவல் ஆணையா் ந. காமினி அறிவுறுத்தினாா்.