முகப்பு
திருச்சி

மனைவியுடன் தகராறு: இளைஞா் தீக்குளிக்க முயற்சி

Updated On : 12 ஏப்ரல், 2024 at 6:55 PM
பகிர்:

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த காட்டுப்பட்டியில் மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் இளைஞா் வியாழக்கிழமை மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றாா்.

மணப்பாறையை அடுத்த காட்டுப்பட்டியில் வசித்து வருபவா் கோவிந்தன் மகன் தமிழ்குடிமகன்(28). இவருக்கும் அவரது மனைவிக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் விரக்தியில் இருந்த அவா் வியாழக்கிழமை மதுபோதையில் வீட்டுக்கு வந்த தமிழ்குடிமகன் தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டாா்.

இதனால் காயமடைந்த தமிழ்குடிமகன் அக்கம்பக்கத்தினரால் மீட்கப்பட்டு மணப்பாறை அரசு மருத்துவமனையில் முதலுதவிக்கு பின் மேல்சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். மணப்பாறை போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

Advertisement

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments