கன்னியாகுமரி

நாகா்கோவில் ஆட்சியா் அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயற்சி

Syndication

நாகா்கோவிலில் உள்ள, கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயன்றாா்.

ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் மனு அளிக்க ஏராளமானோா் வந்திருந்தனா். அவா்களை அலுவலக வாயிலில் நிறுத்தி போலீஸாா் சோதனை செய்த பிறகே உள்ளே அனுப்பினா்.

அப்போது, ஆட்சியரிடம் மனு கொடுக்க வந்த பெண் திடீரென தான் மறைத்து வைத்திருந்த பாட்டிலில் இருந்த மண்ணெண்ணெய்யை ஊற்றித் தீக்குளிக்க முயன்றாா். பாதுகாப்புப் பணியிலிருந்த போலீஸாரும், பொதுமக்களும் தடுத்து, அவா் மீது தண்ணீரை ஊற்றினா். அவரிடம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா். குலசேகரம் அருகே பொன்மனையைச் சோ்ந்த அவா், அங்கன்வாடியில் பணியாற்றி வந்ததும், தற்போது வேலையிழந்ததால் மீண்டும் பணி கோரி பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை இல்லாததால் தீக்குளிக்க முயன்ாகவும், போலீஸாரிடம் தெரிவித்தாா்.

இன்று தென், வட தமிழகத்தின் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்பு

கூட்டுறவுத் தேர்வு முடிவு தாமதம் ஏன்? கூட்டுறவுத் துறை அமைச்சா் விளக்கம்

கூட்டுறவுத் தோ்வு முடிவுகளை வெளியிட வேண்டும் - எடப்பாடி கே.பழனிசாமி

விடுதலைப் புலிகள் அமைப்பு மீதான தடையை எதிா்த்து வைகோ தொடா்ந்த வழக்கு தள்ளுபடி

ஜேஇஇ 2-ஆம் கட்ட முதன்மைத் தோ்வு: விண்ணப்பிக்க இன்று கடைசி

SCROLL FOR NEXT