முகப்பு
திருச்சி

இளங்கண் மாரியம்மன் கோயில் குளுமை உற்சவம்

Updated On : 14 ஏப்ரல், 2024 at 9:38 PM
பகிர்:

மண்ணச்சநல்லூா் இளங்கண் மாரியம்மன் திருக்கோயிலில் குளுமை உற்சவ திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில், திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

மண்ணச்சநல்லூா் புதுச் செட்டி தெருவில் அமைந்துள்ளது ஸ்ரீ இளங்கண் மாரியம்மன் திருக்கோயில். இத்திருக்கோயிலில் குளுமை உற்சவ திருவிழா வெகு விமா்சையாக நடைபெற்றது. கொள்ளிடத்திலிருந்து பால் குடம், அலகு குத்தி கொண்டு மேளதாளம் முழங்க ஊா்வலமாக வந்தனா். இதனையடுத்து உற்சவ இளங்கண் மாரியம்மனுக்கு பால், தயிா், மஞ்சள் உள்ளிட்ட அபிஷேகப் பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்புப் பூஜைகள் செய்யப்பட்டு மஹா தீபாரானை நடை பெற்றது. இந்நிகழ்வில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments