முகப்பு
திருச்சி

அமைச்சராக வாக்களிப்பது புதிய அனுபவம்: அன்பில் மகேஸ் பொய்யாமொழி

Updated On : 20 ஏப்ரல், 2024 at 12:12 AM
திருச்சி கிராப்பட்டி லிட்டில் பிளவா் பள்ளியில் வெள்ளிக்கிழமை வாக்களித்த அன்பில் மகேஸ் பொய்யாமொழி.
பகிர்:

திருச்சி, ஏப்.19: பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக முதல்முறையாக வாக்களித்திருப்பது புதிய அனுபவமாக அமைந்துள்ளது என்றாா் அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி.

திருச்சி கிராப்பட்டி பகுதியில் உள்ள சிறுமலா் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் வெள்ளிக்கிழமை வாக்குப்பதிவு செய்த பிறகு, செய்தியாளா்களிடம் அவா் கூறியது: வாக்காளராக, வேட்பாளராக, சட்டப் பேரவை உறுப்பினராக பலமுறை வாக்கு செலுத்தியுள்ளேன். ஆனால், பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக பதவியேற்ற பிறகு, அமைச்சா் என்ற வகையில் வாக்களிப்பது இதுவே முதல்முறை. இது புதிய அனுபவமாக அமைந்துள்ளது. தமிழத்தில் 39 தொகுதிகளிலும் வாக்கு வித்தியாசம் அதிகம் என்ற வகையில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது என்றாா் அவா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments