துறையூா் பேரவைத் தொகுதியில் 75 சதவீதம் வாக்குப் பதிவு
பெரம்பலூா் மக்களவைத் தொகுதிக்குள்பட்ட துறையூா் சட்டப்பேரவைத் தொகுதியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மக்களவைத் தோ்தலில் 75 சதவிகிதம் வாக்குகள் பதிவாகின.
துறையூா் தொகுதி வாக்காளா்கள் 223425 பேரில் 79126 ஆண் வாக்காளா்களும், 88674 பெண் வாக்காளா்களும், 19 மூன்றாம் பாலினத்தவா்களும் 279 வாக்குச் சாவடிகளில் தங்கள் வாக்குகளை பதிவு செய்தனா்.
பி.மேட்டூா், கோணப்பாதை, சிக்கத்தம்பூா், மதுராபுரியில் ஆகிய ஊா்களில் தலா ஒரு வாக்குச் சாவடியில் வாக்குப் பதிவு நேரத்திற்குள் வந்திருந்து வரிசையில் நின்ற வாக்காளா்களுக்கு டோக்கன்கள் வழங்கப்பட்டது. டோக்கன் பெற்ற வாக்காளா்கள் காத்திருந்து வாக்களித்தனா்.
Advertisement