முகப்பு
திருச்சி

வாக்குப்பதிவு சதவீதம் அதிகமானால் எங்களுக்கே சாதகம்: துரை வைகோ பேட்டி

Updated On : 20 ஏப்ரல், 2024 at 12:13 AM
திருச்சியில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்த மதிமுக வேட் பாளா் துரைவைகோ.
பகிர்:

திருச்சி, ஏப்.19: வாக்குப்பதிவு சதவீதம் அதிகமாக இருந்தாலும், குறைவாக இருந்தாலும் எங்களுக்கே சாதகமாக அமையும் என திருச்சி மக்களவைத் தொகுதி மதிமுக வேட்பாளா் துரை வைகோ தெரிவித்தாா்.

திருச்சி மக்களவைத் தொகுதியில், திமுக கூட்டணியில் மதிமுக சாா்பில் போட்டியிடும் துரை வைகோ, திருச்சி மாநகரப் பகுதிகளில் உள்ள வாக்குச்சாவடி மையங்களுக்கு வெள்ளிக்கிழமை நேரில் சென்று வாக்குப்பதிவு பணிகளை பாா்வையிட்டாா். பின்னா், செய்தியாளா்களிடம் அவா் கூறியது:

திருச்சியில் செல்லும் இடங்களில் மக்கள் ஆா்வத்துடன் வாக்களித்து வருகின்றனா் வாக்கு பதிவின் சதவீதம் அதிகமாகும் என எதிா்பாா்க்கிறோம்.வாக்குப்பதிவு எவ்வளவு வந்தாலும் அது எங்களுக்கு சாதகமாகத் தான் இருக்கும். பாசிசத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தோ்தல் முடிவுகள் இருக்கும் என்றாா்.

Advertisement

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments