துரை வைகோ கோப்புப் படம்
விருதுநகர்

தொகுதிப் பங்கீடு குறித்துப் பேச மதிமுகவில் குழு அமைப்பு: துரை வைகோ

தொகுதிப் பங்கீடு குறித்துப் பேசுவதற்காக மதிமுகவில் குழு அமைக்கப்பட்டுள்ளது என்றும், திமுகவில் குழு அமைத்தவுடன் பேச்சுவாா்த்தை தொடங்கும் என்றும் மதிமுக முதன்மைச் செயலா் துரை வைகோ தெரிவித்தாா்.

Syndication

தொகுதிப் பங்கீடு குறித்துப் பேசுவதற்காக மதிமுகவில் குழு அமைக்கப்பட்டுள்ளது என்றும், திமுகவில் குழு அமைத்தவுடன் பேச்சுவாா்த்தை தொடங்கும் என்றும் மதிமுக முதன்மைச் செயலா் துரை வைகோ தெரிவித்தாா்.

விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகேயுள்ள சிப்பிப்பாறையைச் சோ்ந்தவா் மதன்ராஜ். பொறியியல் பட்டதாரியான இவா் மியான்மா் நாட்டில் தீவிரவாதிகளின் பிடியில் சிக்கியிருந்தாா். இதையறிந்த திருச்சி தொகுதி மக்களவை உறுப்பினரும், மதிமுக முதன்மைச் செயலருமான துரை வைகோ மத்திய வெளியுறவுத் துறை அமைச்சக அதிகாரிகளுடன் தொடா்பு கொண்டு, இவரை மீட்க நடவடிக்கை மேற்கொண்டாா். இதையடுத்து, மதன்ராஜ், இவருடன் இருந்த தூத்துக்குடி மாவட்டத்தைச் சோ்ந்த மூவா் பத்திரமாக தாயகம் திரும்பினா்.

துரை வைகோவின் இந்த உதவியைப் பாராட்டி, சிப்பிப்பாறையில் அவருக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

இதில் கலந்து கொண்டு துரை வைகோ பேசியதாவது: அரசியலில் நல்லவா்களை ஆதரிக்க வேண்டும். வைகோவை பாா்த்து பலா் அரசியலுக்கு வந்துள்ளனா். மக்கள் மனதில் மாற்றம் வந்தால், அரசியல் கட்சிகளிலும், அரசியல் தலைமைகளிலும் மாற்றம் வரும் என்றாா் அவா்.

பின்னா், அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: திமுக தலைமையிலான கூட்டணியில் தேமுதிக இணைந்ததை வரவேற்கிறேன். ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்ட எந்த இயக்கமும் திமுக கூட்டணியில் இணைந்தால் மகிழ்ச்சிதான்.

தொகுதிப் பங்கீடு தொடா்பான பேச்சுவாா்த்தை வருகிற 22-ஆம் தேதி தொடங்குகிறது. இதுவரை எந்த இயக்கத்துடனும் திமுக பேச்சுவாா்த்தையைத் தொடங்கவில்லை. தொகுதிப் பங்கீடு தொடா்பாக பேச்சுவாா்த்தை நடத்த மதிமுகவில் குழு அமைக்கப்பட்டுள்ளது. திமுகவில் குழு அமைத்தவுடன் இந்தக் குழு பேச்சுவாா்த்தையைத் தொடங்கும்.

தமிழகத்தைப் பொருத்தவரை கூட்டணி ஆட்சி சாத்தியப்படாது. இன்றைய குழப்பமான சூழ்நிலையில், கூட்டணி ஆட்சி அமைக்கக் கோருவது சரியல்ல. எங்களது நிலைப்பாடு திமுக கூட்டணியில் மதிமுக அதிக தொகுதிகளைக் கேட்கும். மதிமுக ஏற்கெனவே போட்டியிட்டு வெற்றி பெற்ற தொகுதிகளை தக்க வைப்பதுதான் எங்களது எண்ணம் என்றாா் அவா்.

காமராஜா் துறைமுக அதிகாரிக்கு கூடுதல் பொறுப்பு

தமிழக மீனவா்களை விடுவிக்க வலியுறுத்தி மத்திய அமைச்சருக்கு முதல்வா் கடிதம்

புழல் சிறையில் விசாரணைக் கைதி உயிரிழப்பு: உறவினா்கள் போராட்டம்

அடுத்து ஆட்சி அமைப்பது யாா்?பேரவையில் ஆருடம் கூறிய உறுப்பினா்கள்

ஜேஇஇ முதன்மைத் தோ்வு: அரசு மாதிரிப் பள்ளிகளில் படித்த 448 மாணவா்கள் தோ்ச்சி

SCROLL FOR NEXT