முகப்பு
தற்போதைய செய்திகள்

அடுத்து என்ன முடிவெடுக்கப் போகிறது மார்க்சிஸ்ட், விசிக..?

தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தை இன்னும் நீடித்து வரும் நிலையில், அடுத்து என்ன முடிவெடுக்கப் போகிறது மார்க்சிஸ்ட், விசிக..? என்பது குறித்து...

Updated On : 22 மார்ச், 2026 at 6:02 PM
விசிக தலைவர் தொல்.திருமாவளவன் - கோப்புப் படம்
பகிர்:

தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 234 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வரும் ஏப்ரல் மாதம் 23 ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதன் காரணமாகத் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. அதன் ஒரு பகுதியாக அரசியல் கட்சிகள் கூட்டணியில் உள்ள கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இத்தகைய சூழ்நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விசிக - திமுக இடையேயான தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தை இன்னும் நீடித்து வருகிறது. அதாவது கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் 6 இடங்களில் போட்டியிட்ட நிலையில், இந்த முறை 5 இடங்களை மட்டுமே திமுக வழங்க முன்வந்ததாகக் கூறப்படுகிறது.

இதற்கு சம்மதம் தெரிவிக்காத மார்க்சிஸ்ட், சென்னையில் ஒரு தொகுதியும், அதோடு இதர 5 இடங்கள் 5 வழங்க வேண்டும் என்று கூறியதாகக் கூறப்படுகிறது. இந்த தேர்தல் பரபரப்பான சூழ்நிலையில், மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்ற மார்க்சிஸ்ட் மாநிலக் குழு ஆலோசனைக் கூட்டத்தில் கடந்த தேர்தலில் பெறப்பட்ட 6 இடங்களையாவது பெற வேண்டும் என நிர்வாகிகள் வலியுறுத்தினர். குறைவான இடங்களை வழங்கினால் கூட்டணியில் இருந்து விலகித் தனித்துப் போட்டியிடலாம் எனவும் ஒரு சில நிர்வாகிகள் கருத்து தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

இதுவரை நடந்து முடிந்த மூன்று கட்டப் பேச்சுவார்த்தைகளிலும் சுமுக முடிவு எட்டப்படாத நிலையில், மாநிலக் குழுவின் முடிவின்படி தொகுதிப் பங்கீடு தொடர்பாக, திமுக - மார்க்சிஸ்ட் இடையே நிலவும் இழுபறி குறித்து சண்முகம் தலைமையிலான குழுவினர், நேரடியாக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினை ஞாயிற்றுக்கிழமை சந்தித்துப் பேசினார். இருப்பினும் இறுதி முடிவு எதுவும் எட்டப்படாத நிலையில், 2021 தேர்தலில் 6 இடங்களில் போட்டியிட்ட மார்க்சிஸ்ட், இந்த முறை கூடுதல் இடங்களை ஒதுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

தொகுதிப் பங்கீட்டில் தொடர்ந்து இழுபறி நீடித்தாலும், மதச்சார்பற்ற சக்திகளை ஒன்றிணைத்து பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளை வீழ்த்துவதற்காக திமுக தலைமையிலான கூட்டணியிலேயே மார்க்சிஸ்ட் தொடரும் என்பதில் உறுதியாக இருக்கிறோம். கூட்டணியில் எந்த குழப்பமும் இல்லை, எண்ணிக்கைக்காக கூட்டணியை விட்டு செல்லமாட்டோம் என்று தெரிவித்த மார்க்சிஸ்ட் மாநிலச் செயலளார் பெ.சண்முகம், 5 இடங்களை ஏற்க வேண்டும் என்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோளை ஏற்பதா என்பது குறித்து நாளை(மார்ச் 23) கூடும் மாநில செயற்குழுவில் ஆலோசித்து அடுத்தகட்ட நகர்வு குறித்து முடிவெடுப்போம். ஓரிரு நாள்களில் தொகுதி உடன்பாடு சுமுகமாக நிறைவுபெறும் என கூறினார்.

இதனால் திமுக-மார்க்சிஸ்ட் இடையே தொகுதிப் பங்கீடு இதுவரை உடன்பாடு எட்டப்படாமல் இருந்து வருகிறது.

அடுத்து என்ன முடிவெடுக்கப் போகிறது விசிக?

இதேபோன்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி - திமுக இடையேயான தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தை இன்னும் நீடித்து வருகிறது. விசிக தலைவர் தொல். திருமாவளவன் தலைமையிலான குழுவினருடன், திமுக பொருளாளர் டி.ஆர். பாலு தலைமையிலான குழு தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தையை, திமுக தலைமை அலுவலகமான சென்னை அண்ணா அறிவாலயத்தில் மார்ச் 2 ஆம் தேதி நடத்தியது. அப்போது, போட்டியிட விரும்பும் தொகுதிகளுக்கான பட்டியலை திமுக குழுவிடம் விசிக குழு வழங்கியது. திமுக கூட்டணியில் விசிக-வுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கப்பட வாய்ப்புள்ளதாகத் தகவல் வெளியானது.

இந்த நிலையில், திமுக மற்றும் விசிக இடையே மார்ச் 18 இல் நடைபெறும் 2 ஆம் கட்ட தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையில் தொகுதிகளின் எண்ணிக்கை முடிவு செய்யப்பட்டவுடன் அன்று மாலையே ஒப்பந்தம் கையெழுத்தாகும் என பேசப்பட்டது. ஆனால், கடந்த தேர்தலில் போட்டியிட்ட 6 இடங்களில் இந்த முறை 5 இடங்களை மட்டுமே திமுக வழங்க முன்வந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், விசிக - திமுக இடையேயான தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தை முடிவு எட்டப்படாமல் தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது.

இதையடுத்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவா், பொதுச் செயலா்கள் உள்ளிட்ட முன்னணி பொறுப்பாளா்கள் அங்கம் வகிக்கும் உயா்நிலைக் குழு கூட்டம் சென்னையில் உயா்நிலைக் குழு கூட்டம் திங்கள்கிழமை (மாா்ச் 23) மாலை 3 மணிக்கு நடைபெறுகிறது.

உயா்நிலைக் குழு கூட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளைத் தோ்வு செய்வது, தோ்தல் அறிக்கை தயாரிப்பு, பிரசார பணிகள் உள்ளிட்டவை குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்படும் எனவும் உயா்நிலைக் குழு கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவைத் தொடர்ந்து அடுத்தகட்ட நகர்வு குறித்து முடிவெடுக்கும் என கூறப்படுகிறது.

2021 சட்டப்பேரவைத் தேர்தலில் விசிக 4 தனித் தொகுதிகள், 2 பொதுத் தொகுதிகள் என 6 தொகுதிகளில் போட்டியிட்டது. இந்த முறை விசிகவுக்கு 3 தனித் தொகுதிகள், 2 பொது தொகுதிகள் என 5 தொகுதிகள் ஒதுக்க திமுக தலைமை முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.

திமுக தலைமையிலான கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கட்சி இருவருக்கும் ஒரே எண்ணிக்கையிலான இடங்களை ஒதுக்கும் முடிவிலேயே திமுக இருந்து வந்த நிலையில், இரண்டு கட்சியினரும் ஒரே நாளில் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 6 இடங்களில் ஒன்று குறைத்து 5 இடங்களில் போட்டியிடுவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது குறிப்பிடத்தக்கது.

கூட்டணியில் தொகுதி பங்கீடு தலைவலி என்று முடியுமோ? என்ற நிலையில் திமுக இருந்து வருகிறது

As the seat-sharing negotiations continue, what will be decided next?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.