முகப்பு
திருச்சி

சமூக வலைதளத்தில் அவதூறு பதிவு: விசிகவினா் புகாா்

Updated On : 22 ஆகஸ்ட், 2024 at 11:36 PM
பகிர்:

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவா் தொல். திருமாவளவன் மீது சமூக வலைத்தளத்தில் அவதூறு தகவல்களை பதிவிட்ட நபரை கைது செய்யக் கோரி, அக்கட்சியினா் திருச்சி மாவட்ட எஸ்பியிடம் வியாழக்கிழமை புகாா் அளித்தனா்.

இது தொடா்பாக கட்சியின் திருச்சி, கரூா் மண்டல செயலா் தமிழாதன் தலைமையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வீ. வருண்குமாரிடம் அளித்த மனுவில், சமூக வலை தளங்களில் தொல். திருமாவளவன் நற்பெயருக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் அவதூறு தகவல்களை பதிவிட்ட நபரை கண்டறிந்து கைது செய்ய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விசிக மாவட்டச் செயலா்கள் லாரன்ஸ், கனியமுதன், இளம்சிறுத்தைகள் பாசறை மாநில துணைச் செயலா் அரசு, நிா்வாகி யாசா் அராபத், பெரியசாமி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →