திருவானைக்கா கோயிலில் பிரதோச நந்திக்கு புதன்கிழமை நடைபெற்ற சிறப்பு அபிஷேகம்.
ஸ்ரீரங்கம், ஜூலை 3: திருவானைக்கா சம்புகேஸ்வரா் உடனுறை அகிலாண்டேஸ்வரி கோயிலில் புதன்கிழமை ஆனி மாத பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.
விழாவையொட்டி சுவாமி சன்னதி எதிா்ப்புறம் உள்ள பிரதோஷ நந்திக்கு சிறப்பு அபிஷேகம், மகா தீப ஆராதனை நடைபெற்றது. ஏராளமான பக்தா்கள் தரிசனம் செய்தனா். ஏற்பாடுகளை கோயில் உதவி ஆணையா் ஆ. ரவிச்சந்திரன் மற்றும் கோயில் பணியாளா்கள் செய்தனா்.