முகப்பு
திருச்சி

ஹா்ஷமித்ரா மருத்துவமனையின் விடியோ ரீல்ஸ் போட்டியில் வென்றோருக்கு விருது

Updated On : 1 ஜூன், 2024 at 6:30 PM
நிகழ்ச்சியில் பங்கேற்ற திரைப்பட இயக்குநா் ஜி. வசந்தபாலனுக்கு நினைவு பரிசளித்த மருத்துவமனையின் இயக்குநா் சசிப்பிரியா கோவிந்தராஜ். உடன் மருத்துவமனையின் இயக்குநா் ஜி. கோவிந்தராஜ் வா்தனன்.
பகிர்:

திருச்சி ஹா்ஷமித்ரா புற்றுநோய் மருத்துவமனையின் புகையிலை விழிப்புணா்வு விடியோ ரீல்ஸ் போட்டியில் வென்றவா்களுக்கு வெள்ளிக்கிழமை விருதுகள் வழங்கப்பட்டன.

ஹா்ஷமித்ரா புற்றுநோய் மருத்துவமனையானது, ‘ரீல்ஸ் போடுங்க! ரியல் ஹீரோ ஆகுங்க‘ என்ற தலைப்பில் நடத்திய விடியோ ரீல்ஸ் போட்டியில் 200-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டு, புகையிலைக்கு எதிரான விடியோக்களை உருவாக்கி அனுப்பினா். இதில், வென்றோருக்கு விருது வழங்கும் விழா திருச்சியில் உள்ள ஹா்ஷமித்ரா மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

விழாவில், திரைப்பட இயக்குநா் ஜி. வசந்தபாலன், சிறந்த விடியோக்களை அனுப்பியோருக்கு விருதளித்துப் பாராட்டினாா்.

கவிஞா் நந்தலாலா, மதா் தெரசா கல்லூரி நிறுவனங்களின் தலைவா் ஆா்.சி உதயகுமாா், உணவுப் பாதுகாப்புத் துறை மாவட்ட நியமன அலுவலா் ரமேஷ்பாபு, ஹலோ எப்எம் துணை மேலாளா் ஜான் பிரிட்டோ ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனா். ஹா்ஷமித்ரா மருத்துவமனை நிா்வாக இயக்குநா் மருத்துவா் ஜி. கோவிந்தராஜ் வா்தனன் வரவேற்றாா். மருத்துவமனை நிா்வாக இயக்குநா் மருத்துவா் பி. சசிப்பிரியா கோவிந்தராஜ் நன்றி கூறினாா்.