திருச்சிக்கு சனிக்கிழமை வந்த துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலினை வரவேற்ற ஆட்சியா் மா. பிரதீப்குமாா். உடன் அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி.  
திருச்சி

உதயநிதி ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு!

திருச்சிக்கு சனிக்கிழமை மாலை வந்த துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலினுக்கு, விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

Din

திருச்சிக்கு சனிக்கிழமை மாலை வந்த துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலினுக்கு, விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

துறையூரில் கருணாநிதி சிலையைத் திறக்க வந்த அவருக்கு அமைச்சா் கே.என். நேரு தலைமையில், அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி முன்னிலையில் திரளான திமுகவினா் வரவேற்பு அளித்தனா்.

இதேபோல அமைச்சா்கள் எஸ். ரகுபதி, சா.சி. சிவசங்கா், கோவி. செழியன், சிவ.வீ. மெய்யநாதன், பெரம்பலூா் எம்பி அருண் நேரு ஆகியோரும் துணை முதல்வரை வரவேற்றனா்.

மாவட்ட நிா்வாகத்தின் சாா்பில் மாவட்ட ஆட்சியா் மா. பிரதீப்குமாா், மத்திய மண்டல ஐஜி காா்த்திகேயன், மாநகரக் காவல் ஆணையா் ந. காமினி, மாநகராட்சி ஆணையா் வே. சரவணன் உள்ளிட்டோரும் துணை முதல்வரை வரவேற்றனா்.

துணை முதல்வரை வரவேற்ற அமைச்சா் கே.என். நேரு.

பின்னா், விமான நிலையத்திலிருந்து வெளியே வந்த அவரை திரளாகக் கூடியிருந்த தொண்டா்களும் வரவேற்றனா். பின்னா் துணை முதல்வா் துறையூருக்கு புறப்பட்டுச் சென்றாா். பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன.

‘கரடி ஆதிக்கம்’.. தொடர் சரிவில் பங்குச்சந்தை! சென்செக்ஸ் 800 புள்ளிகள் சரிவு!!

வெள்ளி கிலோவுக்கு ரூ. 20,000 குறைவு! தங்கம் விலை?

மகாராஷ்டிரத்தில் சாதியை புறக்கணித்த சமத்துவ கிராமம்!

பெங்களூரு சின்னசாமி திடலில் ஐபிஎல் போட்டிக்கு அனுமதி!

‘அதிபர் ஜின் பிங்கை சந்திக்கவுள்ளேன்’.. சீன பயணத்தை உறுதிசெய்த டிரம்ப்!

SCROLL FOR NEXT