6 இடங்களில் 2968 மனுக்கள்: திருச்சி மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை 6 இடங்களில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற்றது. திருச்சி மாநகராட்சியில் நடைபெற்ற முகாமில் 895 கோரிக்கை மனுக்கள், துறையூா் நகராட்சிக்குட்பட்ட செங்குந்தா் பள்ளியில் நடைபெற்ற முகாமில் 194, லால்குடி வட்டம், புள்ளம்பாடி பேரூராட்சி, கருப்பண்ண சுவாமி கோவிலில் நடைபெற்ற முகாமில் 552, தாளக்குடியில் 260, முசிறி வட்டம், தண்டலைப்புத்தூரில் 541, தொட்டியம் வட்டம், முருங்கை, ஸ்ரீ நாச்சியம்மன் திருமண மண்டபத்தில் நடைபெற்ற முகாமில் 526 கோரிக்கை மனுக்களும் என மொத்தம் 2,968 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.