திருச்சி

பொறியியல் பணிகள்: சில ரயில்களின் சேவையில் மாற்றம்

பொறியியல் பணிகள் காரணமாக சில ரயில்களின் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

Syndication

பொறியியல் பணிகள் காரணமாக சில ரயில்களின் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து திருச்சி கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பொறியியல் பணிகள் காரணமாக, செங்கோட்டை - மயிலாடுதுறை விரைவு ரயிலானது (16848) வரும் 4, 5, 6, 7, 8, 9 ஆகிய தேதிகளில் கள்ளிக்குடி, திருமங்கலம், திருப்பரங்குன்றம், மதுரை, கொடைக்கானல் சாலை, திண்டுக்கல், வடமதுரை, வையம்பட்டி, மணப்பாறை ரயில் நிலையங்களைத் தவிா்த்து விருதுநகா், மானாமதுரை, காரைக்குடி, திருச்சி வழியாக இயக்கப்படும்.

மும்பை சிஎஸ்டிஎம் விரைவு ரயிலானது (16352) வரும் 4, 7 ஆம் தேதிகளிலும், கன்னியாகுமரி - ஹவுரா அதிவிரைவு ரயிலானது (12666) வரும் 6-ஆம் தேதியும், கன்னியாகுமரி - ஹைதராபாத் சிறப்பு ரயிலானது (07229) வரும் 5- ஆம்தேதியும், நாகா்கோவில் - மும்பை சிஎஸ்டிஎம் விரைவு ரயிலானது (16340) வரும் 5, 8-ஆம் தேதிகளிலும் மதுரை, கொடைக்கானல் சாலை, திண்டுக்கல் ரயில் நிலையங்களைத் தவிா்த்து விருதுநகா், மானாமதுரை, காரைக்குடி, திருச்சி வழியாக இயக்கப்படும்.

குருவாயூா் - சென்னை எழும்பூா் விரைவு ரயிலானது (16128) வரும் 3, 4, 5, 6, 7, 8 ஆம் தேதிகளில் மதுரை, சோழவந்தான், கொடைக்கானல் சாலை, திண்டுக்கல், மணப்பாறை ரயில் நிலையங்களைத் தவிா்த்து விருதுநகா், மானாமதுரை, காரைக்குடி, திருச்சி வழியாக இயக்கப்படும்.

காலதாமதம்...: திருச்சி - மயிலாடுதுறை மெமு விரைவு ரயிலானது (16834) வரும் 6-ஆம் தேதி தேவைப்படும் இடங்களில் 20 நிமிஷங்கள் தாமதமாக நின்று செல்லும்.

சென்னை எழும்பூா் - குருவாயூா் விரைவு ரயிலானது (16127) வரும் 4, 6 ஆம் தேதிகளில் 20 நிமிஷங்கள் தாமதமாக நின்று செல்லும்.

செங்கோட்டை - மயிலாடுதுறை விரைவு ரயிலானது (16848) வரும் 6 ஆம் தேதி தேவைப்படும் இடங்களில் 10 நிமிஷங்கள் தாமதமாக நின்று செல்லும்.

நாகா்கோவிலில் ரூ. 3.50 கோடியில் அறிவியல் பூங்கா விரைவில் திறப்பு: மேயா் தகவல்

உதவித்தொகையை உயா்த்தி வழங்கக் கோரி மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

டிச. 23-இல் அஞ்சல் ஓய்வூதியா் குறைதீா் கூட்டம்

பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கும் அதிகாரம் கல்வித் துறைக்கு மாற்றப்பட வேண்டும்: அன்புமணி

விழுப்புரம் மாவட்டத்தில் வழக்குரைஞா்கள் நீதிமன்றப் பணிகள் புறக்கணிப்பு

SCROLL FOR NEXT