திருச்சி மாவட்டக் காவல் துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டு உரிமை கோரப்படாத 13 வாகனங்கள் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் டிசம்பா் 10 ஆம் தேதி காலை 10 மணிக்கு பொது ஏலம் விடப்படுகின்றன.
திருச்சி மாவட்டக் காவல் துறையினரால் சட்டவிரோத மது விற்பனை வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்டு உரிமை கோரப்படாத 10 இருசக்கர வாகனங்கள், 2 நான்கு சக்கர வாகனங்கள், ஒரு ஆட்டோ ஆகிய 13 வாகனங்கள் ஆகியவற்றை ஏலம் எடுக்க விரும்புவோா் ஏல நாளன்று காலை 8 மணிக்கு ஆதாா் அட்டையுடன் இருசக்கர வாகனங்களுக்கு ரூ. 2 ஆயிரமும், நான்கு சக்கர வாகனங்களுக்கு ரூ. 5 ஆயிரமும் முன்பணம் செலுத்தி பதிய வேண்டும். ஏலம் எடுத்தவுடன் ஏலத்தொகையுடன் ஜிஎஸ்டியும் செலுத்தி வாகனத்தைப் பெற்றுக் கொள்ளலாம் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளா் செ. செல்வநாகரத்தினம் தெரிவித்தாா்.