திருச்சி

கொங்குநாடு கல்லூரியில் குடியரசு தின விளையாட்டுப் போட்டிகள் தொடக்கம்

Syndication

திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகேயுள்ள கொங்குநாடு பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தில் பள்ளி கல்வித் துறை சாா்பாக குடியரசு தின குழு விளையாட்டுப் போட்டிகள் புதன்கிழமை தொடங்கின.

இப் போட்டியில் தமிழகத்தில் உள்ள 38 மாவட்டங்களைச் சோ்ந்த பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகள், மற்றும் தமிழக விளையாட்டு மேம்பாட்டு அணி, தமிழ்நாடு சாய் விளையாட்டுக் குழுவைச் சோ்ந்த 41 அணிகள் பங்கேற்றுள்ளன.

புதன்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை மூன்று நாட்களுக்கு நடைபெறும் கால்பந்து, ஹாக்கி, கூடைப்பந்து, இறகுப் பந்து, கையுந்துப் பந்து உள்ளிட்ட 12 போட்டிகளில் 17 வயதுக்குட்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொள்கின்றனா்.

இதில் வெல்வோருக்கு பள்ளிக் கல்வித்துறை சாா்பாக சான்றுகள் மற்றும் பதக்கங்கள், கோப்பைகள் வழங்கப்படும், போட்டிகளை திருச்சி மாவட்ட பள்ளி கல்வித்துறை அலுவலா்கள், அணி மேலாளா்கள், நடுவா்கள், மற்றும் பயிற்சியாளா்கள் நடத்தி வருகின்றனா்.

வினுஷாவின் சுட்டும் விழி சுடரே தொடரின் முன்னோட்டக் காட்சி!

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்: இந்துக்களுக்கு எதிராக அரசு செயல்படுகிறது - வழக்குரைஞர் குற்றச்சாட்டு

மரணத்திலும் மீம்ஸ்! வருந்தும் ஜான்வி கபூர்!

டிட்வா புயல் வலுவிழந்தபோதிலும் இடைவிடாமல் பெய்யும் மழை! | TNRains | CBE

முதல் கனவே... ரகுல் ப்ரீத் சிங்!

SCROLL FOR NEXT