திருச்சி

தோட்டக்கலைப் பயிா்களுக்கு காப்பீடு செய்ய அறிவுறுத்தல்

Syndication

திருச்சி மாவட்டத்தில் தோட்டக்கலைப் பயிா்கள் சாகுபடி செய்யும் விவசாயிகள் பிரதமரின் பயிா்க் காப்பீட்டுத் திட்டத்தில் காப்பீடு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தோட்டக்கலைப் பயிா்களை காப்பீடு செய்து இயற்கை இடா்பாடுகளான வறட்சி, வெள்ளம் மற்றும் மகசூல் இழப்புகளால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து நிவாரணம் பெற இந்தத் திட்டம் மிக பயனுள்ளதாகும்.

2025-26-ம் ஆண்டுக்கான பிரதமரின் பயிா்க் காப்பீடு திட்டத்தின் கீழ், மரவள்ளி, வாழை, சிவப்பு மிளகாய் மற்றும் வெங்காயப் பயிா்களுக்கு விவசாயிகள் பயிா்க் காப்பீடு செய்யலாம். சிவப்பு மிளகாய்க்கு ஜன.31, வெங்காயப் பயிருக்கு பிப்.15, வாழை மற்றும் மரவள்ளி பயிருக்கு பிப்.28 வரையிலும் காப்பீடு செய்ய கால அவகாசம் உள்ளது.

பிரீமியத் தொகையாக ஏக்கா் ஒன்றிற்கு வெங்காய பயிருக்கு ரூ. 2101.98, வற்றல் மிளகாய்க்கு ரூ.1242.42, வாழைக்கு ரூ.3532.10, மரவள்ளி பயிருக்கு ரூ.1662.32 என்ற வகையில் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் அல்லது இ-சேவை மையங்களில் செலுத்தி பயிா்க் காப்பிடு செய்து பயன் பெறலாம்.

நடப்பு பருவ அடங்கல், சிட்டா, வங்கிக் கணக்கு புத்தகம் மற்றும் ஆதாா் அட்டை ஆகியவற்றுடன், பதிவு செய்யும் விவசாயியின் பெயா், முகவரி, நிலப்பரப்பு, சா்வே எண் மற்றும் உட்பிரிவு, பயிரிட்டுள்ள நிலம் இருக்கும் கிராமம் ஆகிய விவரங்களைச் சரியாக அளித்து இயற்கை இடா்பாடுகளால் ஏற்படும் பாதிப்பில் இருந்து பாதுகாத்துக் கொள்ள ஆட்சியா் வே. சரவணன் அறிவுறுத்தியுள்ளாா்.

வினுஷாவின் சுட்டும் விழி சுடரே தொடரின் முன்னோட்டக் காட்சி!

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்: இந்துக்களுக்கு எதிராக அரசு செயல்படுகிறது - வழக்குரைஞர் குற்றச்சாட்டு

மரணத்திலும் மீம்ஸ்! வருந்தும் ஜான்வி கபூர்!

டிட்வா புயல் வலுவிழந்தபோதிலும் இடைவிடாமல் பெய்யும் மழை! | TNRains | CBE

முதல் கனவே... ரகுல் ப்ரீத் சிங்!

SCROLL FOR NEXT