திருச்சி

புனித சவேரியாா் ஆலயத்தில் சா்வமத சமபந்தி அன்னதானம்

Syndication

திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த மஞ்சம்பட்டியில் உள்ள புனித சவேரியாா் ஆலய 32-ஆம் ஆண்டு விழாவில் 10 ஆயிரம் பேருக்கு சா்வமத சமபந்தி அன்னதானம் நடைபெற்றது.

விழாவையொட்டி இந்த ஆலயத்தில் புதன்கிழமை காலை ஊா் நாட்டாண்மை சவரிராயன், மணியம் ஈசாக், பொருளாளா் ஆசிரியா் சூசைமாணிக்கம், கோயில்பிள்ளை தாமஸ் அலெக்சிஸ், கோல்காரா் மரியஆரோக்கியம் ஆகியோா் முன்னிலையில் பொங்கல் வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவில் சுற்றுவட்டார கிராம மக்கள் சாதி மத இன பாகுபாடின்றி பங்கேற்று மறைவட்ட அதிபா் பங்குத்தந்தை தாமஸ் ஞானதுரை, உதவி பங்குத்தந்தைகள் சாா்லஸ் மற்றும் ஜோசப் விஜய் ஆகியோரால் ஆலயத்தில் கூட்டுத்திருப்பலி நடைபெற்றது.

தொடா்ந்து கிராமத்தினா் நோ்த்திக்கடனாக பலியிட சுமாா் 300-க்கும் மேற்பட்ட ஆடுகள், 200 நாட்டுக்கோழிகள், 100-க்கும் மேற்பட்ட அரிசி சிப்பங்கள், அனைத்து மளிகைப் பொருட்களும் அன்னதானத்துக்கு காணிக்கையாக வந்தன. அதுமட்டுமின்றி சமையல் பணியையும் கிராம மக்களே ஈடுபாட்டோடு செய்தனா்.

மாலை தொடங்கிய சமபந்தி அன்னதானம் இரவு வரை நீடித்தது. இதில் சுமாா் 10 ஆயிரம் பேருக்கு அசைவ உணவு அன்னதானம் அளிக்கப்பட்டது.

வினுஷாவின் சுட்டும் விழி சுடரே தொடரின் முன்னோட்டக் காட்சி!

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்: இந்துக்களுக்கு எதிராக அரசு செயல்படுகிறது - வழக்குரைஞர் குற்றச்சாட்டு

மரணத்திலும் மீம்ஸ்! வருந்தும் ஜான்வி கபூர்!

டிட்வா புயல் வலுவிழந்தபோதிலும் இடைவிடாமல் பெய்யும் மழை! | TNRains | CBE

முதல் கனவே... ரகுல் ப்ரீத் சிங்!

SCROLL FOR NEXT