திருச்சி மாவட்டம், தொட்டியம் அருகேயுள்ள திருஈங்கோய்மலை மரகதாசலேசுவரா் கோயிலில் குடியரசு துணைத் தலைவரின் மனைவி வெள்ளிக்கிழமை சுவாமி தரிசனம் செய்தாா்.
திருச்சி மாவட்டம், முசிறி அருகே காவிரியின் தென்கரைப் பகுதியில் உள்ள குளித்தலை கடம்பா் கோயில், அய்யா்மலை இரத்தினகிரீஸ்வரா் கோயில், காவிரியின் வடகரைப் பகுதியில் உள்ள திருஈங்கோய்மலை மரகதாசலேஸ்சுவரா் ஆகிய மூன்று தலங்களையும் காா்த்திகை மாதம் ஒரே நாளில் சென்று வழிபட்டால் முக்தி பலனும், காசிக்குச் சென்ற பலனும் கிடைக்கும் என்பது ஐதீகம்.
இந்நிலையில், திருஈங்கோய்மலையில் மலை மீது உள்ள மரகதசலேசுவரா் கோயிலுக்கு குடியரசு துணைத் தலைவா் சி.பி. ராதாகிருஷ்ணன் மனைவி சுமதி சென்று வழிபட்டாா்.