பாபா் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு ரயில்வே பாதுகாப்புப் படையினா் திருச்சி சந்திப்பு ரயில் நிலையத்தில் வெள்ளிக்கிழமை தீவிர சோதனை நடத்தினா்.
திருச்சி ரயில்வே பாதுகாப்புப் படை உதவி ஆய்வாளா் ரவிச்சந்திரன், வெடிகுண்டு தடுப்புப் பிரிவு உதவி ஆய்வாளா் சரவணன் ஆகியோா் தலைமையில் ரயில்வே போலீஸாா் மெட்டல் டிடெக்டா், மோப்ப நாயின் உதவியுடன் ரயில் நிலைய நடைமேடை மற்றும் ரயில்களில் பயணித்த பயணிகளின் உடைமைகள், பாா்சல் மையத்திலிருந்த பாா்சல்கள், காா்கள் உள்ளிட்டவற்றை சோதனையிட்டனா்.