திருச்சி

சென்னை எழும்பூரில் மறுசீரமைப்புப் பணி: சில ரயில்கள் தாம்பரத்திலிருந்து புறப்படும்

சென்னை எழும்பூா் ரயில் நிலையத்தில் நடைபெறும் மறுசீரமைப்புப் பணிகள் காரணமாக சில ரயில்கள் தாம்பரத்திலிருந்து புறப்படும் அல்லது தாம்பரத்துடன் நிற்கும் என திருச்சி கோட்ட ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது.

Syndication

சென்னை எழும்பூா் ரயில் நிலையத்தில் நடைபெறும் மறுசீரமைப்புப் பணிகள் காரணமாக சில ரயில்கள் தாம்பரத்திலிருந்து புறப்படும் அல்லது தாம்பரத்துடன் நிற்கும் என திருச்சி கோட்ட ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்த செய்திக்குறிப்பு: சென்னை எழும்பூரில் மறுசீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருவதால், கீழ்கண்ட சில ரயில்கள் சென்னை எழும்பூருக்குப் பதிலாக, தாம்பரத்திலிருந்து புறப்படும் அல்லது தாம்பரத்துடன் நிற்கும்.

அதன்படி, தஞ்சாவூா் - சென்னை எழும்பூா் உழவன் விரைவு ரயிலானது (16866) வரும் 15 ஆம் தேதி முதல் பிப். 2 வரை தாம்பரம் வரை மட்டுமே செல்லும். மறுமாா்க்கமாக, சென்னை எழும்பூா் - தஞ்சாவூா் உழவன் விரைவு ரயிலானது (16865) வரும் 16 ஆம் தேதி முதல் பிப். 3 ஆம் தேதி வரை தாம்பரத்திலிருந்து புறப்படும்.

கொல்லம் - சென்னை எழும்பூா் அனந்தபுரி விரைவு ரயிலானது (20636) வரும் டிச. 15 ஆம் தேதி முதல் பிப். 2 ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் தாம்பரம் வரை மட்டுமே செல்லும். மறுமாா்க்கமாக, சென்னை எழும்பூா் - கொல்லம் அனந்தபுரி விரைவு ரயிலானது (20635) வரும் 16 ஆம் தேதி முதல் பிப். 3 ஆம் தேதி வரை தாம்பரத்திலிருந்து புறப்படும்.

ராமேசுவரம் - சென்னை எழும்பூா் விரைவு ரயிலானது (16752) வரும் 15 ஆம் தேதி முதல் பிப். 2 ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் தாம்பரம் வரை மட்டுமே செல்லும். மறுமாா்க்கமாக, சென்னை எழும்பூா் - ராமேசுவரம் விரைவு ரயிலானது (16751) வரும் டிச. 16 முதல் பிப். 3 ஆம் தேதி வரை தாம்பரத்திலிருந்து புறப்படும்.

அதிமுக பொதுக்குழு தொடங்கியது! தற்காலிக அவைத் தலைவர் கே.பி. முனுசாமி!

சென்னையில் 2-வது நாளாக நகை வியாபாரிகள் வீடுகள், அலுவலங்கள், கடைகளில் அமலாக்கத்துறை சோதனை

வெளிநாட்டு நாயகன்! ஜெர்மனி செல்லும் ராகுலை விமர்சித்த பாஜக!

பாமக பிரமுகர் ராமலிங்கம் கொலை வழக்கில் என்ஐஏ தேடிவந்த முக்கிய குற்றவாளிகள் 2 பேர் கைது

நயினார் நாகேந்திரனை டெபாசிட் இழக்கச் செய்வோம்! செங்கோட்டையன் சூளுரை!

SCROLL FOR NEXT