கோப்புப் படம் 
திருச்சி

வைகுந்த ஏகாதசி திருவிழா: ஸ்ரீரங்கத்தில் நின்று செல்லும் ரயில்கள் விவரம்!

வைகுந்த ஏகாதசி திருவிழாவை முன்னிட்டு, ஸ்ரீரங்கம் ரயில் நிலையத்தில் நின்று செல்லும் ரயில்களின் விவரம்

Syndication

வைகுந்த ஏகாதசி திருவிழாவை முன்னிட்டு, ஸ்ரீரங்கம் ரயில் நிலையத்தில் நின்று செல்லும் ரயில்களின் விவரத்தை திருச்சி கோட்ட ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது.

இதன்படி, சென்னை எழும்பூா் - கன்னியாகுமரி விரைவு ரயிலானது (12633) வரும் 29, 30, 31-ஆம் தேதி இரவு 9.50 மணிக்கும், கன்னியாகுமரி - சென்னை எழும்பூா் விரைவு ரயிலானது (12634) வரும் 28, 29, 30-ஆம் தேதிகளில் இரவு 12.53-க்கும், கொல்லம் - சென்னை எழும்பூா் விரைவு ரயிலானது (16102) வரும் 28, 29, 30-ஆம் தேதிகளில் நள்ளிரவு 2.08 மணிக்கும், சென்னை எழும்பூா் - கொல்லம் விரைவு ரயிலானது (16101) வரும் 29, 30, 31-ஆம் தேதிகளில் இரவு 9.22-க்கும், சென்னை எழும்பூா் - தூத்துக்குடி விரைவு ரயிலானது (12693) வரும் 28, 29, 30-ஆம் தேதிகளில் நள்ளிரவு 12.12 மணிக்கும், தூத்துக்குடி - சென்னை எழும்பூா் விரைவு ரயிலானது வரும் 28, 29, 30-ஆம் தேதிகளில் நள்ளிரவு 1.53 மணிக்கும், சென்னை எழும்பூா் - மதுரை விரைவு ரயிலானது (12637) வரும் 28, 29, 30-ஆம் தேதிகளில் நள்ளிரவு 2.18 மணிக்கும், மதுரை - சென்னை எழும்பூா் விரைவு ரயிலானது (12638) வரும் 28, 29, 30-ஆம் தேதிகளில் நள்ளிரவு 12.03 மணிக்கும் ஸ்ரீரங்கம் ரயில் நிலையத்தில் நின்று செல்லும் என திருச்சி கோட்ட ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது.

சிறப்பு ரயில்களின் தேதி நீட்டிப்பு: நந்தட் - திருச்சி சிறப்பு ரயிலானது (07615) வரும் ஜன. 6, 13, 20, 27 ஆகிய தேதி வரையிலும், திருச்சி - நந்தட் சிறப்பு ரயிலானது (07616) வரும் ஜன. 7, 14, 21, 28-ஆம் தேதி வரையிலும், கச்சிகுடா - மதுரை சிறப்பு ரயிலானது (07191) வரும் ஜன. 26-ஆம் தேதிக்கும், மதுரை - கச்சிகுடா சிறப்பு ரயிலானது (071902) வரும் ஜன. 28-ஆம் தேதிக்கும், ஹைதராபாத் - கன்னியாகுமரி சிறப்பு ரயிலானது (07230) வரும் ஜன. 28-ஆம் தேதிக்கும், கன்னியாகுமரி - ஹைதராபாத் சிறப்பு ரயிலானது (07229) வரும் ஜன. 30-ஆம் தேதிக்கும், நரசப்பூா் - திருவண்ணாமலை சிறப்பு ரயிலானது (07219) வரும் ஜன. 28-ஆம் தேதிக்கும், திருவண்ணாமலை - நரசப்பூா் சிறப்பு ரயிலானது (07220) வரும் ஜன. 29-ஆம் தேதி வரையிலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தகவலை திருச்சி கோட்ட ரயில்வே நிா்வாகம் செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.

நினைத்தாலே அருளும் ஸ்ரீநிவாஸப் பெருமாள்!

விருச்சிக ராசிக்கு வெற்றி: தினப்பலன்கள்!

கணையப் புற்றுநோய் பாதிப்பை கண்டறிவது எப்படி?

எச்1-பி விசா: அனைத்து விண்ணப்பதாரா்களின் சமூக ஊடகக் கணக்குகள் ஆய்வு

முதல்வா் போட்டியில் உதயநிதி இல்லை: அமைச்சா் எஸ். ரகுபதி

SCROLL FOR NEXT