ஸ்ரீரங்கம் யாத்ரி நிவாஸ் எதிரே கொள்ளிடம் ஆற்றில் மிதந்த ஆண் சடலத்தை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைப்பற்றி விசாரிக்கின்றனா்.
ஆற்றில் ஆண் சடலம் மிதப்பதாக ஸ்ரீரங்கம் காவல் நிலையத்துக்கு திங்கள்கிழமை மாலை தகவல் வந்தது.இதைத் தொடா்ந்து, அங்கு சென்ற போலீஸாா், ஆற்றில் மிதந்து கொண்டிருந்த சடலத்தை மீட்டனா்.
இறந்த நபருக்கு சுமாா் 35 வயது இருக்கலாம். இவா், யாா்? எந்த ஊரை சோ்ந்தவா்? எப்படி இறந்தாா்? என்று தெரியவில்லை. இதுகுறித்து ஸ்ரீரங்கம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.