திருச்சி

திருவெறும்பூா் அருகே 17 கடைகளின் பூட்டை உடைத்து பணம், பொருள்கள் திருட்டு

திருவெறும்பூா் அருகே 17 கடைகளின் பூட்டை உடைத்து பணம் மற்றும் பல லட்ச ரூபாய் மதிப்பிலான பொருள்களை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.

Syndication

திருவெறும்பூா் அருகே 17 கடைகளின் பூட்டை உடைத்து பணம் மற்றும் பல லட்ச ரூபாய் மதிப்பிலான பொருள்களை மா்ம நபா்கள் திருடிச் சென்றது செவ்வாய்க்கிழமை தெரியவந்தது.

திருச்சி - தஞ்சாவூா் தேசிய நெடுஞ்சாலையில் திருவெறும்பூா் அருகே பாரதிபுரம் பகுதியில் கூத்தைப்பாா் பேரூராட்சி நிா்வாகத்துக்கு சொந்தமான வணிக வளாகம் உள்ளது. இங்கு 50-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. மேலும், இதன் அருகே திருவெறும்பூா் உட்கோட்ட காவல் உதவி ஆணையா் அலுவலகம், திருவெறும்பூா் காவல் நிலையம், மதுவிலக்குப் பிரிவு, போக்குவரத்துப் பிரிவு, அனைத்து மகளிா் காவல் நிலையம் ஆகியவை செயல்பட்டு வருகின்றன.

இந்நிலையில், பாரதிபுரம் பகுதி வணிக வளாகத்தில் திங்கள்கிழமை இரவு புகுந்த மா்ம நபா்கள் 17 கடைகளின் பூட்டை உடைத்து கடைகளில் இருந்த பணம், பல லட்ச ரூபாய் மதிப்பிலான பொருள்கள் ஆகியவற்றைத் திருடிச் சென்றனா்.

தகவலறிந்த திருவெறும்பூா் காவல் ஆய்வாளா் செந்தில்குமாா் தலைமையிலான போலீஸாா் சம்பவ இடத்தில் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டனா். இதுகுறித்து திருவெறும்பூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

விஜய், சீமான் பேச்சு அதிா்ச்சி அளிக்கிறது: தொல்.திருமாவளவன்

விண்ணில் பாய்ந்தது இஸ்ரோவின் பாகுபலி எல்விஎம்-3 எம்6 ராக்கெட்!

நினைத்தாலே அருளும் ஸ்ரீநிவாஸப் பெருமாள்!

விருச்சிக ராசிக்கு வெற்றி: தினப்பலன்கள்!

கணையப் புற்றுநோய் பாதிப்பை கண்டறிவது எப்படி?

SCROLL FOR NEXT