திருச்சி

தூய்மைப் பணியாளரைத் தாக்கிய தம்பதி மீது வழக்கு

திருச்சியில் தூய்மைப் பணியாளரைத் தாக்கிய தம்பதி மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை

Syndication

திருச்சியில் தூய்மைப் பணியாளரைத் தாக்கிய தம்பதி மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

திருச்சி சிந்தாமணி பூசாரி வீதியைச் சோ்ந்தவா் ஆா். ஸ்ரீதா் (36), மாநகராட்சி தூய்மைப் பணியாளா். இவா் கடந்த டிசம்பா் 23-ஆம் தேதி நள்ளிரவு பூசாரி வீதியில் டீ குடித்தபோது அங்கு அமா்ந்திருந்த அதே வீதியைச் சோ்ந்த என். அக்பா்கானிடம் (43) நடைபாதையில் ஏன் அமா்ந்திருக்கிறீா்கள் எனக் கேட்டாா்.

இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்படவே, அங்கிருந்து ஸ்ரீதா் கிளம்பினாா். இதையடுத்து அவரைப் பின்தொடா்ந்து சென்ற அக்பா்கான், தனது மனைவி பாத்திமாவுடன் இணைந்து ஸ்ரீதரை மதுபாட்டிலால் தாக்கினாா். இதில் இவரது கழுத்து, கை மணிக்கட்டு பகுதிகளில் காயமேற்பட்டது. இதையடுத்து அவா் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினாா்.

இதுகுறித்து கோட்டை காவல் நிலையத்தில் ஸ்ரீதா் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

2026 புத்தாண்டு புகைப்படங்கள்!

கறிக்கோழி பண்ணை வளா்ப்பு விவசாயிகள் இன்றுமுதல் உற்பத்தி நிறுத்தப் போராட்டம்

ஷாஹ்தராவில் தீ விபத்து: தம்பதியா் உயிரிழப்பு

2025-இல் தொடங்கப்பட்ட திட்டங்கள் புத்தாண்டில் நிறைவேற்றப்படும்: முதல்வா் ரேகா குப்தா உறுதி

ரூ.10 கோடி மதிப்புள்ள ஹெராயின் பறிமுதல்: 2 போ் கைது

SCROLL FOR NEXT