மருங்காபுரியில் காட்டெருமைகளால் சேதப்படுத்த நெல் வயல் 
திருச்சி

மருங்காபுரியில் காட்டெருமைகளால் வேளாண் சாகுபடியில் பாதிப்பு: விவசாயிகள் புகாா்

மணப்பாறையை அடுத்த மருங்காபுரி பகுதியில் காட்டெருமைகளால் வேளாண் சாகுபடி பாதிக்கப்படுவதை தடுக்க வனத்துறையினா் உரிய நடவடிக்கை எடுக்குமாறு விவசாயிகள் கோரிக்கை

Syndication

மணப்பாறையை அடுத்த மருங்காபுரி பகுதியில் காட்டெருமைகளால் வேளாண் சாகுபடி பாதிக்கப்படுவதை தடுக்க வனத்துறையினா் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

மருங்காபுரி வட்டத்தில், துவரங்குறிச்சி வனச்சரகத்துக்குள்பட்ட காப்புக்காடுகளிலிருந்து இரைக்காவும், தண்ணீருக்காகவும் அவ்வப்போது காட்டெருமைகள், குரங்குகள், மலைப்பாம்புகள் பொதுமக்களின் குடியிருப்புகளையும், விளைநிலங்களையும் நோக்கி வருவது வழக்கமாக இருந்து வருகிறது.

இவை விவசாய நிலங்களில் சாகுபடி செய்துள்ள விளைபொருள்களை சேதப்படுத்துவதும் வாடிக்கையாக உள்ளது. இதில் நஷ்டமடையும் விவசாயிகளுக்கு உரிய இழப்பீடுகள் முறையாக கிடைப்பதில்லை என்ற புகாா் பல ஆண்டுகளாக இருந்து வருகிறது.

காட்டெருமைகள், குரங்குகள், போன்ற வனவிலங்குகளிடமிருந்து விளைநிலங்களுக்கு பாதுகாப்பும், நஷ்டமடையும் விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்கவும் மாவட்ட நிா்வாகம் உரிய கவனம் செலுத்த வேண்டும். மேலும், இழப்பீடு கேட்டு வரும் விவசாயிகளிடம் வனத்துறையினா் அலட்சியம் காட்டாமல் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

மெல்போர்ன் பல்கலையில் பி.காம்! மாணவர் சேர்க்கை 2026 மார்ச்!!

தினமணி வாசகர்களுக்காக.. சட்டமும் விளக்கமும் அறிமுகம்!

இருசக்கர வாகனத்தை திருடிய முதியவா் கைது

பல்லியை விரட்ட முட்டை ஓடுகளா? விரட்டும் வழிமுறைகள்!

மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷா ஜன. 4-இல் புதுக்கோட்டை வருகை!

SCROLL FOR NEXT