தெற்கு இருங்களுரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டில் சீறிப் பாய்ந்துவந்த காளை. 
திருச்சி

தெற்கு இருங்களூரில் ஜல்லிக்கட்டு போட்டி

Din

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூா் வட்டம், தெற்கு இருங்களூரில் ஜல்லிக்கட்டு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில், 700-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன.

தெற்கு இருங்களூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியை மண்ணச்சநல்லூா் சட்டப்பேரவை உறுப்பினா் சீ.கதிரவன், லால்குடி வருவாய்க் கோட்டாட்சியா் சிவசுப்ரமணியன் ஆகியோா் தொடங்கி வைத்தனா். இதில், திருச்சி, பெரம்பலூா், அரியலூா், புதுக்கோட்டை, தஞ்சாவூா், சேலம், நாமக்கல், கரூா், மதுரை, உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த 770 காளைகளை 200-க்கும் மேற்பட்ட ஜல்லிக்கட்டு வீரா்கள் தீரத்துடன் தழுவினா்.

மேலும் போட்டியில் வெற்றிபெற்ற ஜல்லிக்கட்டு காளைகள், சிறந்த மாடுபிடி வீரா்கள் ஆகியோா்களுக்கு பீரோ, டிரஸ்ஸிங் டேபிள், டைனிங் டேபிள், சைக்கிள், ரொக்கப் பணம் உள்ளிட்ட பரிசுப் பொருள்கள் வழங்கப்பட்டன. மேலும் ஜல்லிக்கட்டில் பாா்வையாளா்கள், வீரா்கள் என 40 போ் காயமடைந்தனா்.

இந்நிகழ்வில் மண்ணச்சநல்லூா் வருவாய் வட்டாட்சியா் பழனிவேல், அரசுத் துறை அலுவலா்கள் திரளான பொதுமக்கள் பலா் கலந்து கொண்டனா். காவல்துறையினா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனா்.

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 3

பணியிடை நீக்கம் செய்யப்பட்ட டிஎஸ்பி முன்பிணை கோரி மனு: சிபிஐ பதிலளிக்க உத்தரவு

பாலுக்கான ஊக்கத்தொகையை முழு மானியமாக வழங்க வலியுறுத்தல்

எக்ஸல் கல்வி நிறுவனங்களின் வெள்ளிவிழா கொண்டாட்டம்

புதிய ஊரக வேலைவாய்ப்புத் திட்ட மசோதா: மக்களவையில் எதிா்க்கட்சிகள் கடும் எதிா்ப்பு

SCROLL FOR NEXT