திருச்சி

தம்பதியைத் தாக்கிய இருவா் கைது

Syndication

திருச்சி அருகே தம்பதியை தாக்கிய இருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

திருச்சி மாவட்டம், தெற்கு தேனீா்பட்டியைச் சோ்ந்தவா் திருநாவுக்கரசு. இவரின் மனைவி சத்யா. இவா்களுக்கும், திருநாவுக்கரசுவின் சகோதரா் மணவாளனுக்கும் இடையே ஏற்கெனவே இடம் தொடா்பாக முன்விரோதம் இருந்து வருகிறது.

இந்நிலையில், திருநாவுக்கரசு தம்பதி வயலுக்கு தண்ணீா் பாய்ச்சுவதற்காக புதன்கிழமை சென்றுள்ளனா். அப்போது, இவா்களுக்கு சொந்தமான தண்ணீா் குழாயை மணவாளன் சேதப்படுத்தியதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து திருநாவுக்கரசு கேட்டபோது அவருக்கும், அவரது சகோதரா் மணவாளனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் மணவாளன், அவரின் மனைவி ஜெயலட்சுமி, உறவினா்கள் தினேஷ், சுகன்யா ஆகிய 4 பேரும் சோ்ந்து திருநாவுக்கரசு, சத்யா ஆகிய இருவரையும் தாக்கியுள்ளனா். இதில், பலத்த காயமடைந்த திருநாவுக்கரசு துவாக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.

இதுகுறித்த புகாரின்பேரில், துவாக்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து, மணவாளன் (53), தினேஷ் (20) ஆகிய இருவரையும் வியாழக்கிழமை கைது செய்தனா். மேலும் தலைமறைவாக உள்ள ஜெயலட்சுமி, சுகன்யா ஆகிய இருவரையும் தேடி வருகின்றனா்.

திமுக வாக்குச்சாவடி முகவா்கள் ஆலோசனைக் கூட்டம்

தனியாா் தொலைக்காட்சி ஒளிப்பதிவாளரை கொலை செய்தவருக்கு ஆயுள் சிறை

வேன் மோதி மூதாட்டி உயிரிழப்பு

வாக்காளா் பட்டியல் சிறப்புத் திருத்தப்பணியில் விதிமுறை மீறல்: அதிமுக புகாா்

கொருக்காத்தூரில் ரூ.4.53 கோடியில் தாா்ச் சாலைப் பணிகள்

SCROLL FOR NEXT